/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
திறன் மேம்பாட்டு பயிற்சி என்.எல்.சி., ஏற்பாடு
/
திறன் மேம்பாட்டு பயிற்சி என்.எல்.சி., ஏற்பாடு
ADDED : ஜூன் 11, 2025 07:15 AM

நெய்வேலி ; நெய்வேலியில் என்.எல்.சி., இந்தியா நிறுவனம் மற்றும் நெய்வேலியில் உள்ள தென் மண்டல தேசிய மின் பயிற்சி நிறுவனம் (என்.பி.டி.ஐ.,) ஆகியவை இணைந்து திறன் மேம்பாட்டு பயிற்சியை துவக்கியது.
என்.பி.டி.ஐ., நிறுவனத்தின் இயக்குனர் திரிப்தா தாக்கூர் பயிற்சியை துவக்கி வைத்தார். சிறப்பு விருந்தினர்களாக என்.எல்.சி., இந்தியா நிறுவன மனித வளத் துறை இயக்குனர் சமீர் ஸ்வரூப், மின்துறை இயக்குனர் வெங்கடாச்சலம், என்.பி.டி.ஐ.,-முதன்மை இயக்குனர் செல்வம் பங்கேற்றனர்.
என்.எல்.சி., சுரங்க விரிவாக்க பணிக்காக வீடு, நிலங்கள் வழங்கியவர்களுக்கு உதவும் வகையில் என்.எல்.சி., இந்தியா நிறுவனம் பயிற்சிக்கு ஏற்பாடு செய்துள்ளது. இத்திட்டம் 'புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மற்றும் மின்கட்டமைப்பு இணைப்புத் தொழில்நுட்பம்' என்ற வேலைவாய்ப்பு சார்ந்த முதுகலை பட்டயப் படிப்பை வழங்குகிறது என அதிகாரிகள் தெரிவித்தனர்.