ADDED : ஜன 26, 2024 12:08 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நடுவீரப்பட்டு : சி.என்.பாளையத்தில் கல்லுாரி மாணவியை காணவில்லை என, போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது.
கடலுார் அடுத்த கரைமேடு புதுநகரை சேர்ந்தவர் கந்தசாமி.
இவரது மகள் ஜெனிபர், 22; சென்னையில் தனியார் கல்லுாரியில் படித்து வந்தார்.
பொங்கல் விடுமுறையில் வீட்டிற்கு வந்திருந்த ஜெனிபரை, கடந்த 20ம் தேதி முதல் காணவில்லை.
இதுகுறித்து நடுவீரப்பட்டு போலீசில் கந்தசாமி கொடுத்த புகாரில், போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

