sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 09, 2025 ,புரட்டாசி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

கோவில் இடத்தை அளக்க சென்ற அதிகாரிகள் தடுத்து நிறுத்தியதால் கடலுாரில் பரபரப்பு

/

கோவில் இடத்தை அளக்க சென்ற அதிகாரிகள் தடுத்து நிறுத்தியதால் கடலுாரில் பரபரப்பு

கோவில் இடத்தை அளக்க சென்ற அதிகாரிகள் தடுத்து நிறுத்தியதால் கடலுாரில் பரபரப்பு

கோவில் இடத்தை அளக்க சென்ற அதிகாரிகள் தடுத்து நிறுத்தியதால் கடலுாரில் பரபரப்பு


ADDED : ஜூன் 19, 2025 05:37 AM

Google News

ADDED : ஜூன் 19, 2025 05:37 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடலுார் : புதுப்பாளையத்தில் கோவில் இடத்தை அளக்க சென்ற இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகளை, ஆக்கரமிப்பாளர்கள் தடுத்து முற்றுகையிட்டு தகராறில் ஈடுப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

புதுப்பாளையம் சுப்ரமணியர் தெரு, ரெட்டைபிள்ளையார் கோவில் தெரு, மாட்டுப்பட்டித் தெரு ஆகிய தெருக்களில் இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள திரவுபதியம்மன் கோவிலுக்கு சொந்தமான இடம் உள்ளது. சர்வே எண் 641 இடத்தில் உள்ள 50,000 சதுர அடி பரப்பில் 78 பேர் வீடு கட்டி ஆக்கரமிப்பு செய்துள்ளனர். இவர்கள் கோவிலுக்கு செலுத்த வேண்டிய வரியையும் பல ஆண்டுகளாக செலுத்தவில்லை.

இந்த இடம் மாநகராட்சி நகர திட்டமிடல் (டவுன் பிளானிங்) பதிவேட்டில் திரவுபதியம்மன் கோவிலுக்கு சொந்தமானது என உள்ளது. ஆனால் வருவாய்த்துறை சிட்டா அடங்கல் பதிவேட்டில் தனி நபர்களுக்கு சொந்தமானது என திருத்தப்பட்டுள்ளதாக இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள் குற்றம் சாட்டுகின்றனர்.

நேற்று போலீஸ் பாதுகாப்புடன் கோவில் தர்க்கார் சரவணரூபன் தலைமையில் திருக்கோவில் சர்வேயர்கள் வினோத்குமார், முத்துராஜ் மற்றும் கோவில் நிர்வாகிகள் திரவுபதியம்மன் கோவில் இடத்தை அளக்க சென்றனர். இதற்கு ஆக்கரமிப்பாளர்கள் திரண்டு, கோவில் அதிகாரிகளை முற்றுகையிட்டு அளக்க கூடாது என தகராறில் ஈடுப்பட்டனர்.

சரவணரூபன் , இந்து சமய அறநிலையத் துறை பதிவேடுகளை காண்பித்தும் விளக்கம் அளித்தும் போலீஸ் அதிகாரி மற்றும் மா.கம்யூ., பிரமுகர் சமாதானம் அடையாததால் இரு தரப்பினருக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. கோவில் இடத்தை அளவீடு செய்ய உரியவர்கள் சென்ற போது ஒருபக்கம் ஆக்கரமிப்பாளர்கள், ஒரு பக்கம் போலீசார், அரசியல் கட்சியினர் தடுத்ததால் அதிருப்தி அடைந்த கோவில் அலுவலர்கள் அளவீடு செய்யாமல் திரும்பி சென்றதால் புதுப்பாளையம் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.






      Dinamalar
      Follow us