/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
கிராம உதவியாளர் வீட்டில் திருட்டு
/
கிராம உதவியாளர் வீட்டில் திருட்டு
ADDED : மே 20, 2025 06:32 AM
விருத்தாசலம்: கிராம உதவியாளர் வீட்டில் நகைகள் திருடிய மர்ம நபர்களை போலீசார்தேடி வருகின்றனர்.
மங்கலம்பேட்டையைச் சேர்ந்தவர் முகமது பாரூக்,30; மங்கலம்பேட்டை கிராம உதவியாளர். இவரது மனைவி ஷகிலா பானு, மகன்கள் முகமது பாசில், அப்துல் ரஹீம் ஆகியோர் விருத்தாசலத்தில் தனது தந்தை வீட்டிற்கு சென்றார்.நேற்று முன்தினம் வீட்டை பூட்டி விட்டு, விருத்தாசலம் தாலுகா அலுவலகத்தில் நடந்த ஜமாபந்தி பணிக்காக முகமது பாரூர் சென்றார்.
பணியை முடித்து வீடு திரும்பிய போது, கதவு உடைக்கப்பட்டு, பீரோவில் இருந்த 2 லட்சம் ரூபாய் மதிப்பிலான 3 சவரன் நகைகள், ரூ.60 ஆயிரம் ரொக்கத்தை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரிந்தது. மங்கலம்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து, விசாரிக்கின்றனர்.