ADDED : ஜூன் 14, 2025 02:22 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடலுார் : கடலுார் பழைய வண்டிப்பாளையம் திரவுபதி அம்மன் கோவில் தீமிதி திருவிழாவில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்று தீமிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.
கடலுார், பழைய வண்டிப்பாளையம் திரவுபதி அம்மன் கோவிலில் தீமிதி பிரம்மோற்சவ விழா, கடந்த 27ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. கடந்த 9ம் தேதி மாலை அர்ச்சுனர் வில் வளைத்தலை தொடர்ந்து அம்மன் திருக்கல்யாண உற்சவம் நடந்தது.
10ம் தேதி திரவுபதி அம்மன், அர்ச்சுனர் பரிவேட்டை, 11ம் தேதி பூச்சொரிதல் உற்சவம் நடந்தது. நேற்று மாலை தீமிதி திருவிழா நடந்தது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்று தீமிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர். விழா ஏற்பாடுகளை கோவில் அறங்காவலர்கள் பெருமாள், சந்திரசேகரன், கோவிந்தன், கந்தசாமி, சுந்தரேசன், விழாக்குழு தலைவர்கள் சந்திரசேகரன், கிருஷ்ணமூர்த்தி செய்திருந்தனர்.