/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
சிறுவன் ஓட்டிய கார் மோதி 2 வீடுகள் சேதம்
/
சிறுவன் ஓட்டிய கார் மோதி 2 வீடுகள் சேதம்
ADDED : செப் 21, 2025 11:31 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிதம்பரம்:சிதம்பரத்தில் சிறுவன் கார் ஓட்டி விபத்து ஏற்படுத்தியதில், 2 வீடுகளின் சுவர் இடிந்து சேத மானது.
கடலுார் மாவட்டம், சிதம்பரம் தில்லை நகரை சேர்ந்தவர் 17 வயது சிறுவன். இவர், நேற்று மதியம் அதே பகுதியில் பொலிரோ கார் ஓட்டிச் சென்றார்.
அப்போது, கார் கட்டுப்பாட்டை இழந்து தறிகெட்டு ஓடியது. இதனால், அவ்வழியாக சென்ற பொதுமக்கள் அலறியடித்து ஓடியதால் பரபரப்பு நிலவியது.
தொடர்ந்து, தில்லை நகரில் அடுத்தடுத்து 2 வீடுகளின் முன்பக்க சுவர் மீது கார் மோதியது. இதில், வீடுகளில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பைக் சேதமானது.
சிதம்பரம் நகர போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.