/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
அங்கன்வாடி மையம் திறப்பு எப்போது: மக்கள் எதிர்பார்ப்பு
/
அங்கன்வாடி மையம் திறப்பு எப்போது: மக்கள் எதிர்பார்ப்பு
அங்கன்வாடி மையம் திறப்பு எப்போது: மக்கள் எதிர்பார்ப்பு
அங்கன்வாடி மையம் திறப்பு எப்போது: மக்கள் எதிர்பார்ப்பு
ADDED : ஜூன் 13, 2025 03:37 AM

நெல்லிக்குப்பம்: நெல்லிக்குப்பத்தில் புதிய அங்கன்வாடி மையத்தை திறக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நெல்லிக்குப்பம் நகராட்சி 26 வது வார்டு வைடிபாக்கத்தில் பழமையான கட்டடத்தில் அங்கன்வாடி மையம் செயல்படுகிறது. இங்கு, 20 க்கும் மேற்பட்ட குழந்தைகள் படிக்கின்றனர். அங்கன்வாடி மைய கட்டடம் எப்போது, வேண்டுமானாலும் இடிந்து விழும் அபாய நிலையில் உள்ளது. இதனால், பெற்றோர், தங்கள் குழந்தைகளை அனுப்ப அச்சமடைந்துள்ளனர்.
இதையடுத்து நகராட்சி நிர்வாகம் 12 லட்சம் ரூபாய் செலவில் அதே பகுதியில் புதிய அங்கன்வாடி மைய கட்டடத்தை கட்டியது. ஆனால், கட்டுமான பணிகள் முடிந்து 5 மாதங்களுக்கு மேலாகியும் திறக்கப்படாமல் பூட்டியே கிடக்கிறது.
எனவே, பெரிய அளவில் அசம்பாவித சம்பவங்கள் நடப்பதற்கு முன் புதிய அங்கன்வாடி மைய கட்டடத்தை திறக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.