/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
ஸ்பீக்கரில் பைக் மோதி தொழிலாளி பரிதாப பலி
/
ஸ்பீக்கரில் பைக் மோதி தொழிலாளி பரிதாப பலி
ADDED : ஜூன் 07, 2025 03:06 AM
விருத்தாசலம்: புதுமனை புகுவிழாவிற்கு வைத்திருந்த ஸ்பீக்கர் பாக்சில் பைக் மோதிய சம்பவத்தில் தொழிலாளி இறந்தார்.
மங்கலம்பேட்டை அடுத்த விஜயமாநகரம் புதுவிளாங்குளம் கிராமத்தை சேர்ந்தவர் செல்வம், 42; தச்சு தொழிலாளி. நேற்று முன்தினம் நள்ளிரவு 1:00 மணிக்கு, வேலை முடிந்து, தனது பைக்கில், வீட்டிற்கு திரும்பி கொண்டிருந்தார்.
அப்போது, அதே பகுதியை சேர்ந்த சக்திவேல் என்பவரின் புதுமனை புகுவிழாவிற்கு வீட்டு வாசலில் வைத்திருந்த ஸ்பீக்கர் பாக்ஸ் மீது எதிர்பாராத விதமாக செல்வம் ஓட்டி வந்த பைக் மோதியது. இதில், பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே இறந்தார்.
இது குறித்த புகாரின் பேரில், மங்கலம்பேட்டை இன்ஸ்பெக்டர் பார்த்தசாரதி வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.