/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
கிடப்பிலுள்ள நீர்மேலாண்மை திட்டங்கள் நிறைவேற்ற விவசாயிகள் வலியுறுத்தல்
/
கிடப்பிலுள்ள நீர்மேலாண்மை திட்டங்கள் நிறைவேற்ற விவசாயிகள் வலியுறுத்தல்
கிடப்பிலுள்ள நீர்மேலாண்மை திட்டங்கள் நிறைவேற்ற விவசாயிகள் வலியுறுத்தல்
கிடப்பிலுள்ள நீர்மேலாண்மை திட்டங்கள் நிறைவேற்ற விவசாயிகள் வலியுறுத்தல்
ADDED : ஜன 27, 2024 04:10 AM
அரூர்: தர்மபுரி மாவட்டம், அரூர், மொரப்பூர் பகுதியில், கிடப்பில் போடப்பட்டுள்ள நீர்மேலாண்மை திட்டங்களை செயல்படுத்த, விவசாயிகள் வலியுறுத்தி வருகின்றனர்.
இது குறித்து, அவர்கள் கூறியதாவது: மழைக்காலங்களில் தென்பெண்ணையாற்றில் செல்லும் வெள்ள நீர் மற்றும் கிருஷ்ணகிரி அணையிலிருந்து திறந்து விடப்படும் தண்ணீர் வீணாக, கடலில் கலக்கிறது. இதை கருத்தில் கொண்டு, கிருஷ்ணகிரி கே.ஆர்.பி., அணையின் வலதுபுற வாய்க்காலை, மொரப்பூர் வரை நீட்டிக்க, விவசாயிகள் வலியுறுத்தி வருகின்றனர்.
அதேபோல், எம்.வெளாம் பட்டி அருகே, செல்லும் தென்பெண்ணையாற்றின் குறுக்கே, செனாக்கல் என்னும் இடத்தில் தடுப்பணை கட்ட வேண்டும் என கடந்த, 40 ஆண்டுகளுக்கு மேலாக, விவசாயிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். தடுப்பணை கட்டுவது குறித்து, அதிகாரிகள் பல முறை ஆய்வு நடத்தியும், எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
மேலும், கே.ஈச்சம்பாடி தடுப்பணை நீரேற்று திட்டம் மூலம், மொரப்பூர், கடத்துார், பாப்பிரெட்டிப்பட்டி பகுதிகளிலுள்ள, 66 ஏரிகளில் நிரப்ப, விவசாயிகள் பல ஆண்டுகளாக வலியுறுத்தி வந்தனர். இதையேற்று, தமிழக அரசு கடந்த, 2020 பட்ஜெட்டில், 400 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்தது. ஆனால், இதுவரை பணிகளை துவங்கவில்லை. அதே போல், மாம்பட்டி அருகே தென்பெண்ணையாற்றின் குறுக்கே குமரன் தடுப்பணையை சீரமைக்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, 10 சதவீத பணிகள் நடந்த நிலையில், அத்திட்டம் கிடப்பில் போடப்
பட்டுள்ளது.
வரட்டாற்றின் குறுக்கே, வேடியப்பன் கோவில், முத்துக்கவுண்டர் தோட்டம் ஆகிய இடங்களில், தடுப்பணைகள் அமைக்க வேண்டும் என்ற, விவசாயிகளின் கோரிக்கையும் நிறைவேற்றப்படவில்லை. எனவே, கிடப்பிலுள்ள இத்திட்டங்களை விரைந்து செயல்படுத்த வேண்டும்.
இவ்வாறு, அவர்கள் கூறினர்.

