/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
உலக சுற்றுச்சூழல் தினத்தில் மரக்கன்று நட்டு விழிப்புணர்வு
/
உலக சுற்றுச்சூழல் தினத்தில் மரக்கன்று நட்டு விழிப்புணர்வு
உலக சுற்றுச்சூழல் தினத்தில் மரக்கன்று நட்டு விழிப்புணர்வு
உலக சுற்றுச்சூழல் தினத்தில் மரக்கன்று நட்டு விழிப்புணர்வு
ADDED : ஜூன் 06, 2024 04:25 AM
தர்மபுரி: தர்மபுரி கூடுதல் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் ஜூன், 5 உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு, தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் சார்பில், மரக்கன்றுகள் நடப்பட்டன.சுற்றுச்சூழலின் நலன் குறித்து, சிந்தித்து செயலாற்றுவதற்கான நாளாக உலக சுற்றுச்சூழல் தினம் ஒவ்வொரு ஆண்டும் ஜூன், 5ல் கடைபிடிக்கப்படுகிறது.
உலக சுற்றுச்சூழல் தினத்தை கொண்டாடும் விதமாக, தர்மபுரி கூடுதல் மாவட்ட கலெக்டர் வளாகத்தில் நேற்று, தர்மபுரி மாவட்ட கலெக்டர் சாந்தி தலைமையில், 50 மரக்கன்றுகள் நட்டு வைத்தனர். தொடர்ந்து, பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் சார்பில், மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் மற்றும் உதவிப்பொறியாளர்கள் மூலம், உறுதிமொழி ஏற்றுக் கொண்டனர்.இதில், டி.ஆர்.ஓ., பால்பிரின்ஸ்லி ராஜ்குமார், கூடுதல் கலெக்டர் கௌரவ்குமார், ஆர்.டி.ஓ., காயத்ரி, மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் நித்யலட்சுமி, தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரிய உதவி பொறியாளர்கள் மற்றும் அரசுத்துறை உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.