/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
பட்டா நிலத்தில் அனுமதியின்றி எடுத்த 10 டன் கனிமம் பறிமுதல்
/
பட்டா நிலத்தில் அனுமதியின்றி எடுத்த 10 டன் கனிமம் பறிமுதல்
பட்டா நிலத்தில் அனுமதியின்றி எடுத்த 10 டன் கனிமம் பறிமுதல்
பட்டா நிலத்தில் அனுமதியின்றி எடுத்த 10 டன் கனிமம் பறிமுதல்
ADDED : ஜூன் 13, 2025 01:21 AM
பாப்பிரெட்டிப்பட்டி, தர்மபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டியில், அரசு அனுமதியின்றி கனிமங்கள் வெட்டி எடுக்கப்படுவதாக, மாவட்ட சுரங்க துறை உதவி இயக்குனர் இளையசெல்விக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, பே.தாதம்பட்டியில் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது பே.தாதம்பட்டியை சேர்ந்த கார்மேகம் என்பவருக்கு சொந்தமான, 30.50 ஹெக்டேர் பட்டா நிலத்தில் உரிய அரசு அனுமதியின்றி, சில நாட்களாக வெள்ளை குவார்ட்ஸ் எனப்படும் கனிமத்தை நிலத்திலிருந்து தோண்டி எடுத்தது தெரியவந்தது.
அதை, வேறிடத்திற்கு எடுத்துச்செல்ல குவித்து வைத்திருந்ததை அதிகாரிகள் கைப்பற்றினர். தொடர்ந்து வெட்டி எடுக்கப்பட்ட இடத்தை, சுரங்க துறை அதிகாரிகள் அளவீடு செய்தனர். மாவட்ட கலெக்டர் சதீஷ் உத்தரவின் படி, 10 டன் எடையுள்ள கனிமங்கள், கார்மேகம் நிலத்தில் இருந்து பாப்பிரெட்டிப்பட்டி தாலுகா அலுவலக வளாகத்திற்கு எடுத்து வரப்பட்டு அங்கு குவித்து வைக்கப்பட்டுள்ளது.
இது குறித்து, சுரங்கம் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் கூறுகையில்,' பாப்பிரெட்டிப்பட்டி, அரூர் பகுதியில் வெள்ளை நிற குவார்ட்ஸ் படிகங்கள், மலைப்பாங்கான பகுதிகளில் அதிகளவில் கிடைக்கிறது. இது வடமாநிலங்களில் அதிகளவில் வரவேற்பை பெற்றது. இதன் மூலம் அலங்கார பொருட்கள், கைக்கடிகாரங்கள், கணினி, அழகு சாதன பொருட்கள், மின்னணு சாதனங்கள், மற்றும் கட்டுமான பொருட்களாக பயன்படுத்த படுகிறது. பட்டா நிலம் என்றாலும் குறைந்தபட்சம், 3 அடிக்கு மேல் எடுக்கக்கூடாது. முறையாக அனுமதி பெற வேண்டும். ஆனால், அனுமதி பெறாமல் எடுக்கின்றனர். இதை அளவீடு செய்து, சம்பந்தப்பட்டவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும்' என்றனர்.