/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
புகையிலை பொருட்கள் விற்ற 17 கடைகளுக்கு அபராதம்
/
புகையிலை பொருட்கள் விற்ற 17 கடைகளுக்கு அபராதம்
ADDED : ஜூலை 05, 2025 01:25 AM
கம்பைநல்லுார், தர்மபுரி மாவட்டம், கம்பைநல்லுார் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை சுற்றியுள்ள மளிகை கடைகள், ஓட்டல்கள், பேக்கரிகள் மற்றும் திரையரங்கம் ஆகியவற்றில் வட்டார மருத்துவ அலுவலர் அரசு தலைமையில், சுகாதார ஆய்வாளர்கள் நேற்று ஆய்வு மேற்கொண்டனர். அதில் சுகாதார சீர்கேடு விளைவிக்கும் வகையில் இருந்த கடைகள் மற்றும், 18 வயதுக்கு கீழ் உள்ளவர்களுக்கு புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படமாட்டாது,
இங்கு புகைபிடித்தல் கூடாது என்ற விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகள் வைக்காத, 17 கடைகளுக்கு மொத்தம், 7,000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.வட்டார சுகாதார மேற்பார்வையாளர் சக்திவேல், சுகாதார ஆய்வாளர்கள் ராஜேஷ், விஜய் ஆனந்த், விக்னேஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.