/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
தொடர் திருட்டு வழக்கில் சகோதரர்கள் 3 பேர் கைது
/
தொடர் திருட்டு வழக்கில் சகோதரர்கள் 3 பேர் கைது
ADDED : ஜூன் 06, 2025 01:36 AM
நல்லம்பள்ளி :தர்மபுரி மாவட்டம், தடங்கம் தேசிய நெடுஞ்சாலை மேம்பாலம் அருகே, அதியமான்கோட்டை போலீசார் நேற்று வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.
அப்போது, ஒரே மொபட்டில் வந்த, 3 பேரை நிறுத்தி சோதனை மேற்கொண்டனர்.
அதில், மொபட்டில், 16.5 பவுன் நகை, கதவு, ஷட்டர் லாக் மற்றும் பீரோ லாக்கை உடைக்கும் சுத்தி, ஸ்குருவ் ட்ரைவர் உள்ளிட்ட இரும்பு பொருட்கள் இருந்தன. மூவரிடமும் மேற்கொண்ட விசாரணையில், அவர்கள், தர்மபுரி அரசு கலைக்கல்லுாரி பின்புறமுள்ள நந்தி நகரை சேர்ந்த முகமதுயூசப்பின் மகன்களான மொய்தீன், 38, சாதிக்பாஷா, 34, ஷாஜகான், 28, ஆகியோர் என்பதும், மூவரும் திருட்டு வழக்கில் சிறை சென்று வந்ததுடன், தமிழகத்திலுள்ள, 14 மாவட்டங்களில், ஒவ்வொருவர் மீதும், 20க்கும் மேற்பட்ட வழக்குகள் இருப்பதும் தெரிய வந்தது. தற்போது பிடிபட்டுள்ள, 16.5 பவுன் நகைகளும், அதியமான் கோட்டை மற்றும் தர்மபுரி நகர போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் சமீபத்தில் வீடுகளின் பூட்டை உடைத்து திருடியுள்ளனர். மூவரையும் கைது செய்த போலீசார், அவர்களிடமிருந்து, 16.5 பவுன் நகை, மொபட்டை பறிமுதல் செய்தனர்.