/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
செயற்கை முறையில் பழுக்க வைத்த 550 கிலோ மாம்பழங்கள் பறிமுதல்
/
செயற்கை முறையில் பழுக்க வைத்த 550 கிலோ மாம்பழங்கள் பறிமுதல்
செயற்கை முறையில் பழுக்க வைத்த 550 கிலோ மாம்பழங்கள் பறிமுதல்
செயற்கை முறையில் பழுக்க வைத்த 550 கிலோ மாம்பழங்கள் பறிமுதல்
ADDED : மே 28, 2025 01:41 AM
பாலக்கோடு :காரிமங்கலம் மற்றும் பாலக்கோடு பகுதியில், பழ குடோன் மற்றும் கடைகளில் செயற்கை முறையில் பழுக்க வைத்த, 550 கிலோ மாம்பழங்களை, உணவு பாதுகாப்புத்துறையினர் பறிமுதல் செய்தனர்.
தர்மபுரி மாவட்ட உணவு பாதுகாப்பு துறையின் மாவட்ட நியமன அலுவலர் டாக்டர் கைலாஷ்குமார் தலைமையில், காரிமங்கலம் மற்றும் பாலக்கோடு ஒன்றிய உணவு பாதுகாப்பு அலுவலர் நந்தகோபால், மொரப்பூர் ஒன்றிய உணவு பாதுகாப்பு அலுவலர் திருப்பதி உள்ளிட்ட குழுவினர், பாலக்கோட்டில் தர்மபுரி சாலை, எம்.ஜி.,ரோடு, பைபாஸ் சாலை, மைதீன் நகர், கோட்டை தெரு உள்ளிட்ட இடங்களில், மாம்பழ குடோன்கள் மற்றும் மொத்த விற்பனை நிலையங்கள், சில்லரை விற்பனை நிலையங்களில் ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது, ஒரு குடோன் மற்றும் 2 மொத்த விற்பனை நிலையங்களில் செயற்கை முறையில் எத்திலின் திரவம் தெளித்தும், எத்திலின் பவுடர் மாம்பழ பெட்டிகளில் வைத்தும் செயற்கை முறையில் பழுக்க வைத்திருந்தது தெரிய வந்தது. இதையடுத்து, 550 கிலோ மாம்பழங்கள் பறிமுதல் செய்யப்பட்டதுடன், மூன்று கடை உரிமையாளர்களுக்கும் தலா, 2,000 ரூபாய் வீதம் மொத்தம், 6,000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.