/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
சிறு மழைக்கே சாலையில் தேங்கும் மழைநீரால் அவதி
/
சிறு மழைக்கே சாலையில் தேங்கும் மழைநீரால் அவதி
ADDED : மே 27, 2025 02:11 AM
தர்மபுரி, தர்மபுரி மாவட்டத்தில், கடந்த சில நாட்களாக மாலை நேரங்களில் மழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் மாலை பெய்த மழையால், தர்மபுரி தடங்கம் பஞ்.,க்கு உட்பட்ட ஒட்டப்பட்டி அரசு கல்லுாரி மாணவியர் விடுதி, இலக்கியம்பட்டி பஞ்.,க்கு உட்பட்ட செந்தில் நகர் பெட்ரோல் பங்க், இலக்கியம்பட்டி சாலை மாரியம்மன் கோவில் உள்ளிட்ட இடங்களில், கழிவு நீர் கால்வாயில் அடைப்பு ஏற்பட்டது. இதனால், மழை நீருடன் கலந்த கழிவுநீர் செல்ல வழியின்றி சாலையில் குளம் போல் தேங்கியது. சாலை
யில் சென்றவர்கள் மற்றும் வாகன ஓட்டிகள் மிகவும் அவதிக்கு ஆளாகினர். மீண்டும், கனமழை பெய்தால், இப்பகுதியில் தாழ்வாக உள்ள வீடுகளுக்குள் மழைநீர் புகும் நிலையுள்ளது. இதனிடையே, சாலையில் தேங்கும் மழைநீரை அகற்ற, நகராட்சி நிர்வாகம் எவ்வித நடவடிக்கையும் எடுப்பதில்லை என, புகார் கூறும் பொதுமக்கள், மழைநீர் வெளியேறும் வகையில், மழைநீர் வடிகால் கால்வாய் அமைக்க வலியுறுத்தி உள்ளனர்.