/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
முகூர்த்த தினம் எதிரொலி தர்மபுரியில் பூ விலை உயர்வு
/
முகூர்த்த தினம் எதிரொலி தர்மபுரியில் பூ விலை உயர்வு
முகூர்த்த தினம் எதிரொலி தர்மபுரியில் பூ விலை உயர்வு
முகூர்த்த தினம் எதிரொலி தர்மபுரியில் பூ விலை உயர்வு
ADDED : ஜூன் 06, 2025 01:39 AM
தர்மபுரி, முகூர்த்த தினத்தையொட்டி, தர்மபுரி பூ சந்தையில் நேற்று பூக்களின் விலை உயர்ந்து காணப்பட்டது.
தர்மபுரி மாவட்டத்தில் பரவலாக, விவசாயிகள் பூ சாகுபடி செய்து வருகின்றனர். அறுவடை செய்த பூக்களை, தர்மபுரி டவுன் பஸ் ஸ்டாண்டிலுள்ள பூ சந்தையில் விற்பனை செய்கின்றனர். இங்கிருந்து தர்மபுரி, ஓசூர், கிருஷ்ணகிரி, ஈரோடு, திருச்செங்கோடு, கும்பகோணம் உள்ளிட்ட பகுதிகளுக்கும், பெங்களூரு, கேரளா, ஆந்திரா, உள்ளிட்ட அண்டை மாநிலங்களுக்கும் பூக்களை வியாபாரிகள் வாங்கிச் செல்கின்றனர்.
நேற்று, இன்று மற்றும் வரும், 8ல் வைகாசி சுபமுகூர்த்தம் என்பதால், பூக்கள் தேவை அதிகரித்து, தர்மபுரி பூ சந்தையில் பூக்கள் விலை உயர்ந்துள்ளது. கடந்த, 3 நாட்களுக்கு முன், 300 ரூபாய் விற்ற ஒரு கிலோ மல்லிகை பூ, நேற்று இருமடங்காக கிலோ, 600 ரூபாய் என விற்றது. முல்லை பூ கிலோவுக்கு, 300 ரூபாய் உயர்ந்து, 600 ரூபாய்க்கும், சாமந்தி, 200, பட்டன்ரோஸ் கிலோ, 200 ரூபாய் என விற்றது.