/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
தர்மபுரியில் கனமழை; வாகன ஓட்டிகள் அவதி
/
தர்மபுரியில் கனமழை; வாகன ஓட்டிகள் அவதி
ADDED : ஜூன் 14, 2025 06:56 AM
தர்மபுரி: தர்மபுரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில், நேற்று மாலை கனமழை பெய்தது.
தர்மபுரி மாவட்டத்தில், கனமழை பெய்யும் என வானிலை மையம் அறிவித்த நிலையில், கடந்த சில தினங்களாக ஒரு சில பகுதிகளில் மட்டும் மழை பெய்து வந்தது.
இந்நிலையில், நேற்று முன்தினம் மாலை மற்றும் இரவு தர்மபுரி, நல்லம்பள்ளி பென்னாகரம், பாப்பிரெட்டிப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் பரவ-லாக மழை பெய்தது. நேற்று காலை, 6:00 மணி நிலவரப்படி மாவட்டத்தில் அதிகபட்சமாக பென்னாகரத்தில், 10 மி.மீ., மழை பெய்தது. அதை தொடர்ந்து பாப்பிரெட்டிப்பட்டியில், 6.2, தர்ம-புரியில், 5 என, 21.2 மி.மீ., மழையளவு பதிவானது.இந்நிலையில் நேற்று மாலை, 4:00 மணிக்கு மேல் தர்மபுரி, நல்-லம்பள்ளி, பென்னாகரம், பெரும்பாலை, ஏரியூர் உட்பட மாவட்-டத்தின் பல்வேறு பகுதிகளில், 5:45 மணி வரை பரவலாக கன-மழை பெய்தது. இதனால், தர்மபுரி நகரில் உள்ள சாலைகளில் மழைநீருடன் கழிவுநீர் ஆறு போல் ஓடியது. இதனால், வாகன ஓட்டிகள் வாகனங்களை மிதமான வேகத்தில் இயக்கி சென்ற-துடன் கடும் அவதியடைந்தனர்.
* கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் சுற்றுவட்டார பகுதிகளில், நேற்று மாலை, 4:30 மணி முதல் ஒரு மணி நேரம் காற்றுடன் பலத்த மழை பெய்தது. சின்ன பர்கூர், கணேஷ் நகர் மற்றும் பைபாஸ் சாலை பகுதிகளில் பெய்த மழையால், பர்கூர் பேரூராட்-சிக்கு உட்பட்ட பகுதிகளில் கழிவுநீர் கால்வாயில் மழை நீரும் கலந்து சாலையில் ஓடியதால் துர்நாற்றம்
வீசியது.
* அரூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில், இரண்டாவது நாளாக நேற்று மாலை, 5:30 மணி முதல், சூறை காற்றுடன் விட்டு விட்டு பரவலாக மழை பெய்தது. இதனால், அரூரில் பாட்சாபேட்டை, நான்குரோடு, திரு.வி.க., நகர் உள்ளிட்ட இடங்-களில் சாலையில் மழை நீர் தேங்கியதால் வாகன ஓட்டிகள் அவ-திக்கு உள்ளாகினர். மழையால் குளிர்ச்சியான சீதோஷ்ண நிலை
நிலவியது