/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
மதுவிலக்கு பிரிவு வேண்டாம்: பெண் போலீசுக்கு எஸ்.பி., அறிவுரை
/
மதுவிலக்கு பிரிவு வேண்டாம்: பெண் போலீசுக்கு எஸ்.பி., அறிவுரை
மதுவிலக்கு பிரிவு வேண்டாம்: பெண் போலீசுக்கு எஸ்.பி., அறிவுரை
மதுவிலக்கு பிரிவு வேண்டாம்: பெண் போலீசுக்கு எஸ்.பி., அறிவுரை
ADDED : ஜூன் 15, 2025 02:25 AM
தர்மபுரி, ''மதுவிலக்கு பிரிவில், வாகன ஓட்டுனராக பணிபுரிய வேண்டாம்,'' என, பெண் போலீசுக்கு தர்மபுரி மாவட்ட எஸ்.பி., அறிவுரை கூறினார்.
தர்மபுரி மாவட்ட போலீசார் பயன்படுத்தும், வாகனங்களின் மாதாந்திர ஆய்வு மற்றும் செயல்பாடு குறித்து, எஸ்.பி., மகேஸ்வரன் நேற்று ஆய்வு மேற்கொண்டார். தர்மபுரி மாவட்டத்தில், எஸ்.பி., முதல் இன்ஸ்பெக்டர்கள் வரை, பல்வேறு பிரிவுகளில் பயன்படுத்தப்படும் ஜீப், கார், பஸ்கள், வேன், பைக் என, 100-க்கும் மேற்பட்ட வாகனங்களை, தர்மபுரி மாவட்ட எஸ்.பி., அலுவலக வளாகத்தில் எஸ்.பி., மகேஸ்வரன் நேற்று ஆய்வு செய்தார். அதில் வாகனங்களில் சைரன், முகப்பு விளக்கு, பழுது ஏற்பட்ட வாகனங்கள் மற்றும் பழுது நீக்குவதற்கான உபகரணங்கள் ஆகியவை குறித்து ஆய்வு செய்தார். அப்போது முகப்பு விளக்கு, சைரன் மற்றும் பிரேக் பிடிக்காத வாகனங்களை, அடுத்த முறை ஆய்வுக்கு கொண்டு வரும்போது, சரி செய்து கொண்டு வர வேண்டும் என, போலீசாருக்கு அறிவுறுத்தினார்.
இதையடுத்து, மதுவிலக்கு பிரிவில் டாடா சுமோ காரின் ஓட்டுனராக பணிபுரியும் பூங்கொடிக்கு, எஸ்.பி., மகேஸ்வரன் வாழ்த்து தெரிவித்தார். மேலும், மதுவிலக்கு பிரிவில் இருப்பது, சவாலாக இருக்கும். குற்றவாளிகள் அதிவேகமாக விபத்தை ஏற்படுத்தும் வகையில் அச்சுறுத்தி செல்வர். உங்களுக்கு அங்கு பாதுகாப்பு இல்லை. எனவே, அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேஷன் இன்ஸ்பெக்டருக்கு, ஓட்டுனராக பணி மாறுதல் பெற்றுக் கொள்ள அறிவுறுத்தினார். விபத்தை கட்டுப்படுத்துவதோடு, போலீசாரும் வாகனத்தில் பாதுகாப்போடு செல்ல வேண்டும் என அறிவுறுத்தினார்.