/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
விவசாயிகளுக்கு பயிர் காப்பீடு செய்ய அதிகாரி அறிவுறுத்தல்
/
விவசாயிகளுக்கு பயிர் காப்பீடு செய்ய அதிகாரி அறிவுறுத்தல்
விவசாயிகளுக்கு பயிர் காப்பீடு செய்ய அதிகாரி அறிவுறுத்தல்
விவசாயிகளுக்கு பயிர் காப்பீடு செய்ய அதிகாரி அறிவுறுத்தல்
ADDED : ஜூலை 05, 2025 01:26 AM
பாப்பிரெட்டிப்பட்டி, பாப்பிரெட்டிப்பட்டி வட்டார, உதவி வேளாண்மை அலுவலர் அருணன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:
பாப்பிரெட்டிப்பட்டி மற்றும் பொம்மிடி வட்டத்தில், சாகுபடி செய்துள்ள பயிர்களுக்கு காரீப் பயிர் காப்பீடு செய்ய வேண்டும். பிரதமரின் பயிர் காப்பீட்டு திட்டத்தின் கீழ், 2025--26ம் ஆண்டிற்கான காரீப் பருவ பயிர்களுக்கான நெல், சோளம், மக்காச்சோளம், துவரை, நிலக்கடலை பருத்தி மற்றும் ராகி பயிர்களுக்கு குத்தகை விவசாயிகள், பயிர் கடன் பெறும் விவசாயிகள் உட்பட அனைத்து விவசாயிகளும் காப்பீடு செய்ய தகுதியானவர்கள்.
ஆகவே, விதைப்பு முதல் அறுவடை வரை உள்ள பயிர் காலத்தில், இயற்கை இடர்பாடுகளால் ஏற்படும் மகசூல் இழப்பிற்கு காப்பீடு வழங்கப்படுகிறது. நெல் சோளம் மற்றும் நிலக்கடலைக்கு வரும் 31ம் தேதி, ராகி மற்றும் மக்காச்சோளத்துக்கு ஆக.,16, துவரைக்கு செப்., 16, பருத்திக்கு செப்., 30ம் தேதியும் பயிர் காப்பீடு செய்ய கடைசி நாளாகும்.
ஆகவே முன்மொழிவு படிவம், பதிவு படிவம், சிட்டா, அடங்கல், ஆதார் அட்டை, வங்கி கணக்கு புத்தகம் ஆகிய விபரங்களுடன் வட்டாரத்தில் உள்ள பொது சேவை மையம், தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் வங்கி மற்றும் தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் காப்பீடு செய்து பயன்பெறலாம்.
இவ்வாறு கூறப்பட்டுள்ளது.