sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தர்மபுரி

/

பாலக்கோடு ஸ்ரீ மூகாம்பிகை பாலிடெக்னிக் மாணவர்கள் அரசு வாரியத்தேர்வில் சாதனை

/

பாலக்கோடு ஸ்ரீ மூகாம்பிகை பாலிடெக்னிக் மாணவர்கள் அரசு வாரியத்தேர்வில் சாதனை

பாலக்கோடு ஸ்ரீ மூகாம்பிகை பாலிடெக்னிக் மாணவர்கள் அரசு வாரியத்தேர்வில் சாதனை

பாலக்கோடு ஸ்ரீ மூகாம்பிகை பாலிடெக்னிக் மாணவர்கள் அரசு வாரியத்தேர்வில் சாதனை


ADDED : ஜன 26, 2024 10:19 AM

Google News

ADDED : ஜன 26, 2024 10:19 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தர்மபுரி: கடந்த 2023 அக்.,ல் நடந்த டிப்ளமோ தேர்வு முடிவுகளை, தொழில்நுட்ப இயக்ககம் தற்போது வெளியிட்டுள்ளது. இதில், பாலக்கோடு ஸ்ரீ மூகாம்பிகை பாலிடெக்னிக் கல்லுாரி மாணவ, மாணவியர் அதிக மதிப்பெண்கள் மற்றும் அதிக சதவீதம் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளனர்.

இக்கல்லுாரியின், 2ம் ஆண்டு எலக்ட்ரிக்கல் துறை மாணவி கமலி, 700க்கு, 691 மதிப்பெண்களும், 3ம் ஆண்டு எலக்ட்ரானிக்ஸ், கம்யுனிகேஷன்ஸ் துறை மாணவர் பார்த்திபன், 700க்கு, 690 மதிப்பெண்களும், 2ம் ஆண்டு எலக்ட்ரிக்கல் துறை மாணவி கோதாவரி, 700க்கு, 686 மதிப்பெண்களும், 2ம் ஆண்டு எலக்ட்ரிக்கல் துறை மாணவர் முனியப்பன், 700க்கு, 674 மதிப்பெண்கள் பெற்று, கல்லுாரிக்கு பெருமை சேர்த்துள்ளனர்.

தேர்வு எழுதிய எலக்ட்ரானிக்ஸ் மற்றும் கணினி துறை மாணவர்கள், 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளனர். இயந்திரவியல் மற்றும் எலக்ட்ரிக்கல் மாணவர்கள், 90 சதவீதத்துக்கு மேல் தேர்ச்சி பெற்றுள்ளனர். சாதனை படைத்த மாணவர்கள், விரிவுரையாளர்களை கல்லுாரி தலைவர் கோவிந்தராஜ் பாராட்டினார். மேலும், இக்கல்லுாரியில் சேர்ந்து பயின்ற மாணவர்கள், 85 சதவீதத்திற்கும் மேல் மதிப்பெண்களை பெற, பயிற்சி அளித்து சிறந்த நிறுவனங்களில் வேலைவாய்ப்பு பெற்று தருகிறோம் என்றார். பிளஸ் 2 அல்லது, ஐ.டி.ஐ., முடித்தவர்கள் டிப்ளமோ படிப்பதற்கு அரசு அங்கீகாரம் பெற்று அதற்கான சேர்க்கை நடக்கிறது என, கல்லுாரி முதல்வர் சரவணன் தெரிவித்துள்ளார்.






      Dinamalar
      Follow us