/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
குடிநீர் கேட்டு பஞ்., ஆபீஸ் முற்றுகை
/
குடிநீர் கேட்டு பஞ்., ஆபீஸ் முற்றுகை
ADDED : செப் 16, 2025 02:11 AM
பென்னாகரம், தர்மபுரி மாவட்டம், பென்னாகரம் அடுத்த மாங்கரையில், 1,000க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். இங்கு கடந்த ஒரு வாரமாக ஒகேனக்கல் கூட்டு குடிநீர் வரவில்லை. இதனால், குடிநீரின்றி சிரமத்திற்கு ஆளான மக்கள், பஞ்., செயலரிடம் இது குறித்து, முறையிட்டும் நடவடிக்கை எடுக்கவில்லை. ஆத்திரமடைந்த மக்கள் நேற்று காலை, மாங்கரை பஞ்., அலுவலகத்தை காலி குடங்களுடன் முற்றுகையிட்டனர்.
தகவலறிந்து வந்த பென்னாகரம் பி.டி.ஓ.,க்கள் லோகநாதன், சக்திவேல் மற்றும் ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்ட அதிகாரிகள், கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, ஓரிரு நாட்களில் ஒகேனக்கல் குடிநீர் வழங்க ஏற்பாடு செய்வதாக உறுதியளித்தால், முற்றுகையை கைவிட்டு, மக்கள் கலைந்து சென்றனர்.