sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 12, 2025 ,புரட்டாசி 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தர்மபுரி

/

11, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு காலாண்டு தேர்வு இன்று துவக்கம்

/

11, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு காலாண்டு தேர்வு இன்று துவக்கம்

11, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு காலாண்டு தேர்வு இன்று துவக்கம்

11, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு காலாண்டு தேர்வு இன்று துவக்கம்


ADDED : செப் 10, 2025 01:32 AM

Google News

ADDED : செப் 10, 2025 01:32 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தர்மபுரி, தமிழக பள்ளி கல்வித்துறை, காலாண்டு தேர்வுகளை நடத்த, மாவட்ட முதன்மை கல்வி அலுவலகங்களுக்கு உரிய உத்தரவு மற்றும் வழிகாட்டல்களை வழங்கி உள்ளது. அதன்படி, பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 வகுப்புகளுக்கான காலாண்டு தேர்வுகள் செப்., 10 இன்று தொடங்கி, செப்., 25 வரை நடக்கவுள்ளது.

இது குறித்து, தர்மபுரி மாவட்ட சி.இ.ஓ., ஜோதிசந்திரா தெரிவித்துள்ளதாவது: தர்மபுரி மாவட்டத்தில் காலாண்டு தேர்வுகள் இரு கட்டமாக நடக்கவுள்ளது. முதல் கட்டமாக, பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 வகுப்புகளுக்கு செப்., 10 முதல், 25 வரை நடக்கிறது. அடுத்ததாக, 6 முதல், 10ம் வகுப்புகளுக்கு செப்., 15 முதல், செப்., 26 வரை நடக்கவுள்ளது.தேர்வுகளை கண்காணித்து வழி நடத்த, தர்மபுரி, அரூர், பாலக்கோடு, பென்னாகரம் ஆகிய, 4 இடங்களில் வினாத்தாள் கட்டு காப்பு மையம் அமைக்கப்பட்டுள்ளது. இங்கிருந்து, பிரத்யேக குழுக்களை கொண்டு, வினாத்தாள்கள் வினியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

காலாண்டு தேர்வு குறித்து, தலைமை ஆசிரியர்களுடனான ஆலோசனை கூட்டம், தர்மபுரியில் நேற்று முன்தினம் நடந்தது. இதில், 2024- - 25 கல்வியாண்டில், 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொதுத்தேர்வுகளில், 100 சதவீத தேர்ச்சி பெற்ற, 120 பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

இவ்வாறு, அவர் தெரிவித்தார்.






      Dinamalar
      Follow us