/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
தமிழ்நாடு விவசாயிகள் சங்க வட்டார மாநாடு
/
தமிழ்நாடு விவசாயிகள் சங்க வட்டார மாநாடு
ADDED : ஜன 26, 2024 10:22 AM
தர்மபுரி: தமிழ்நாடு, விவசாயிகள் சங்க வட்டார மாநாடு, வட்டார செயலாளர் மாணிக்கம் தலைமையில் இண்டூரில் நடந்தது. வட்டார தலைவர் சின்னராஜ் வேலை அறிக்கை வாசித்தார். இ.கம்யூ., கட்சி மாவட்ட செயலாளர் கலைச்செல்வம், துணை செயலாளர் மாதேஸ்வரன் ஆகியோர் வாழ்த்தி பேசினர்.
இதில், காவிரி உபரிநீர் திட்டத்தை வரும் பட்ஜெட்டில் அறிவித்து பணிகளை உடனடியாக, தமிழக அரசு துவங்க வேண்டும். பசும்பால் விலை லிட்டருக்கு, 50 ரூபாயும், எருமை பாலுக்கு, 60 ரூபாயும் வழங்க வேண்டும். இண்டூர் ஏரியிலுள்ள கருவேல மரங்களை அகற்றி, துார்வார நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். இங்குள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு, புதிய கட்டடம் கட்டி கூடுதல் மருத்துவர்கள் மற்றும் பணியாளர்களை நியமிக்க வேண்டும், என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்தில், புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். தமிழ்நாடு, விவசாய சங்க தர்மபுரி மாவட்ட செயலாளர் சின்னசாமி, இ.கம்யூ., கட்சி வட்டார செயலாளர் மாது, துணை செயலாளர் மாதையன், முன்னாள் வட்டார செயலாளர் குட்டி உள்பட பலர், கலந்து கொண்டனர்.

