/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
ஹோமியோபதி மருத்துவத்தில் தைராய்டு குறைபாடுக்கு தீர்வு
/
ஹோமியோபதி மருத்துவத்தில் தைராய்டு குறைபாடுக்கு தீர்வு
ஹோமியோபதி மருத்துவத்தில் தைராய்டு குறைபாடுக்கு தீர்வு
ஹோமியோபதி மருத்துவத்தில் தைராய்டு குறைபாடுக்கு தீர்வு
ADDED : ஆக 03, 2024 05:07 AM

ஹோமியோபதி மருத்துவத்தில் தைராய்டு குறைபாடுகளுக்கான சிகிச்சை தைராய்டு சுரப்பி என்பது சிறிய பட்டாம்பூச்சி வடிவிலான கழுத்தின் முன் பகுதியில் உள்ள ஒரு சுரப்பி ஆகும். இதன் முக்கிய வேலை நம் உடம்புக்கு தேவையான தைராய்டு ஹார்மோனை சுரப்பதாகும். தைராய்டு குறைபாடுகள் ஏற்படும் போது அதில் பாதிக்கப்பட்டவர்கள் மிகவும் சோர்வாகவும் உடல் எடை பருமன் அல்லது எடை குறைவு, முடி உதிர்தல் போன்ற பிரச்னைகள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளது. பெண்களுக்கு மாதவிடாய் குறைபாடுகளும் ஏற்படலாம். இது ஆண்களை விட பெண்களையே அதிகமாக பாதிக்கும். இது முன் கழுத்துக் கழலை (Goitre) நோய்க்கும் காரணமாக இருக்கிறது. இதற்கான தீர்வு என்பது வாழ்நாள் முழுவதும் மருந்து மாத்திரைகளை உட்கொள்வதும் ,அறுவை சிகிச்சை செய்து தைராய்டு சுரப்பியை முழுவதுமாகவோ ,பகுதியையோ அகற்றுவது என்று பலரும் நினைத்துக் கொள்கின்றனர். ஆனால் ஹோமியோபதி மருத்துவத்தில் மருந்துகள் எடுத்துக் கொள்ளும் போது ஒரு குறிப்பிட்ட காலம் வரை எடுத்துக் கொண்டாலே இந்த குறைபாடை முழுமையாக சரி செய்யலாம். இம்மருத்துவ முறையில் நோயின் தன்மை, நோயாளியின் தன்மை மற்றும் மனக்குறிகளின் அடிப்படையில் மருந்துகள் தேர்வு செய்து கொடுக்கப்படுகிறது. அவ்வாறு கொடுக்கும் போது அது தைராய்டு சுரப்பியை தூண்டி, தைராய்டு ஹார்மோன் சுரப்பதையும் சீராக்குகிறது. எனவே வாழ்நாள் முழுவதும் மருந்துகள் எடுக்க வேண்டிய அவசியமும் ஏற்படாது.
---டாக்டர். வ.கீதா, திண்டுக்கல், 98946 23800.
டாக்டர் ஆனந்த் , திண்டுக்கல், 90907 77767.