/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
ஐம்பொன் சிலைகள் குப்பையிலிருந்து மீட்பு
/
ஐம்பொன் சிலைகள் குப்பையிலிருந்து மீட்பு
ADDED : ஜூன் 06, 2024 04:14 AM

திண்டுக்கல், : திண்டுக்கல் சீலப்பாடி அருகே குப்பை குவியல்களுக்குள் கிடந்த இரு ஐம்பொன் சுவாமி சிலைகளை வருவாய் துறையினர் மீட்டனர்.
சீலப்பாடி என்.எஸ். நகர் பகுதியில் நேற்று சிலப்பாடி ஊராட்சி துாய்மை பணியாளர்கள் துாய்மை பணியில் ஈடுபட்டனர். ரோட்டோர குப்பை குவியல்களை சுத்தம் செய்தபோது இரு ஐம்பொன் சுவாமி சிலைகள் இருப்பதை கண்டனர். தாலுகா போலீசார், மேற்கு தாசில்தார் வில்சன் தலைமையிலான வருவாய்த்துறையினர் சிலைகளை மீட்டனர்.
இச்சிலைகளை யாரேனும் கடத்தி வந்து விட்டு சென்றார்களா என விசாரிக்கின்றனர். இன்று பழநி ஹிந்து அறநிலையத்துறை அதிகாரிகள் வரவழைக்கப்பட்டு எந்த காலத்தில் தயாரிக்கப்பட்டது. என்ன சிலை என ஆய்வு செய்ய உள்ளனர்.