/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
வனத்தில் பிளாஸ்டிக்கழிவு மது பாட்டில்கள் அகற்றம்
/
வனத்தில் பிளாஸ்டிக்கழிவு மது பாட்டில்கள் அகற்றம்
ADDED : ஜூன் 07, 2024 07:03 AM

ஓட்டன்சத்திரம்: ஒட்டன்சத்திரம் பாச்சலுார் ரோட்டில் வனத்துறை யொட்டிய ரோட்டோரங்களை மது பாராக மாற்றுவோர் பிளாஸ்டிக்கழிவு , மது பாட்டில்களை போட்டு செல்வதால் வன விலங்குகள் பாதிப்பதாக தினமலர் நாளிதழில் வெளியான செய்தியை தொடர்ந்து ரோட்டோர பிளாஸ்டிக்கழிவு , மது பாட்டில்கள் அகற்றும் பணி நடந்தது.
வனப்பகுதி வழியாக செல்லும் ரோட்டோரங்களில் மது பிரியர்கள் குடித்துவிட்டு மது பாட்டில்களை அங்கேயே வீசி செல்வது , பிளாஸ்டிக் பைகளை போட்டு செல்வதால் வனப் பகுதியில் வாழும் உயிரினங்களுக்கு மிகுந்த பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால் சுற்றுச்சூழலை காக்க நடவடிக்கை எடுக்க கோரி ஏப். 16 தினமலர் நாளிதழில் செய்தி வெளியானது.
இதன் எதிரொலியாக சுற்றுச்சூழல் தினமான நேற்று ஒட்டன்சத்திரம் வனத்துறை,கிருபா பவுண்டேஷன் இணைந்து ஒட்டன்சத்திரம் பாச்சலுார் ரோட்டில் வனத்துறை செக்போஸ்டில் இருந்து வடகாடு மலை கிராமம் வரை 7 கி.மீட்டர் துாரம் ரோட்டின் இரு பக்கங்களிலும் இருந்த பிளாஸ்டிக் கழிவுகள், மது பாட்டில்கள், தண்ணீர் பாட்டில்கள் ஆகியவற்றை அகற்றும் பணி நடந்தது. தொடர்ந்து ரோட்டின் இரு பக்கங்களிலும் மரக்கன்றுகளை நட்டனர்.
பவுண்டேஷன் இயக்குனர் சிவக்குமார் கூறுகையில், ஒட்டன்சத்திரத்தில் தொடங்கியது போல் தன்னார்வல அமைப்புகள் வனத்துறையுடன் இணைந்து தமிழகத்தில் அனைத்து வனப் பகுதிகளிலும் உள்ள பிளாஸ்டிக் கழிவுகளை அகற்றி வன உயிரினங்கள் , சுற்றுச்சூழலை பாதுகாக்க வேண்டும்'' என்றார்.