ADDED : ஜூலை 12, 2024 07:48 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டுக்கல்: கரூர் மாவட்டம் அய்யம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் மருதமுத்து 29.
2022ல் குஜிலியம்பாறை பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமியை கடத்தி சென்று பாலியல் தொல்லை கொடுத்தார். குஜிலியம்பாறை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் மருதமுத்துவை கைது செய்தனர். இதன் வழக்கு திண்டுக்கல் விரைவு மகிளா நீதிமன்றத்தில் நடந்தது. விசாரித்த நீதிபதி சரண்,குற்றவாளி மருதமுத்துவிற்கு 24 ஆண்டு சிறை தண்டனை,ரூ.5000 அபராதம் விதித்து தீர்ப்பளித்தார்.