/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
ஆக.2, 3ல் நத்தத்தில் ஜூனியர் தடகள போட்டி
/
ஆக.2, 3ல் நத்தத்தில் ஜூனியர் தடகள போட்டி
ADDED : ஜூலை 05, 2024 05:44 AM
நத்தம்: திண்டுக்கல் மாவட்ட தடகள சங்கத்தின் சார்பாக மாவட்ட ஜூனியர் தடகள சாம்பியன்ஷிப் போட்டிகள் ஆக.2 ,3 ல் நடக்கிறது.
திண்டுக்கல் மாவட்ட தடகள சங்கத்தின் சார்பாக மாவட்ட அளவில் 6,8,10,12 வயது உடையவர்களுக்கான தடகள போட்டிகள் ஆகஸ்ட் 2, 14,16,18,20 வயது உடையவர்களுக்கான மாவட்டஜூனியர் தடகள சாம்பியன்ஷிப் போட்டிகள் ஆகஸ்ட் 3 நடக்கிறது . .இப்போட்டிகள் அனைத்தும் நத்தம் என்.பி.ஆர்., கல்விக்குழுமத்தில் நடக்கிறது. கலந்து கொள்ளும் தடகள வீரர் , வீராங்கனைகள், பள்ளி மாணவர்கள் ddaaentry@gmail.com ல் பதிவு செய்து கொள்ளுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது. மாவட்ட ஜூனியர் தடகள சாம்பியன்ஷிப் போட்டிகளில் வெற்றிபெறும் தடகள வீரர் , வீராங்கனைகள் செப்டம்பரில் ஈரோடு மாவட்டத்தில் மாநில அளவில் நடக்கும் மாவட்ட ஜூனியர் சாம்பியன்ஷிப் 2024 கலந்து கொள்ள அனுமதிக்கப்படுவார்கள்.
மேலும் விபரங்களுக்கு 89736 66664, 94439 34534ல் தொடர்பு கொள்ளலாம் .