/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
வாகன ஆக்கிரமிப்புகளால் இடையூறு வெளிநபர்கள் நடமாட்டத்தால் அச்சம் பரிதவிப்பில் பழநி நகராட்சி 26 வது வார்டு மக்கள்
/
வாகன ஆக்கிரமிப்புகளால் இடையூறு வெளிநபர்கள் நடமாட்டத்தால் அச்சம் பரிதவிப்பில் பழநி நகராட்சி 26 வது வார்டு மக்கள்
வாகன ஆக்கிரமிப்புகளால் இடையூறு வெளிநபர்கள் நடமாட்டத்தால் அச்சம் பரிதவிப்பில் பழநி நகராட்சி 26 வது வார்டு மக்கள்
வாகன ஆக்கிரமிப்புகளால் இடையூறு வெளிநபர்கள் நடமாட்டத்தால் அச்சம் பரிதவிப்பில் பழநி நகராட்சி 26 வது வார்டு மக்கள்
ADDED : ஜூலை 11, 2024 06:17 AM

பழநி: வாகன ஆக்கிரமிப்புகளால் இடையூறு,வெளிநபர்கள் நடமாட்டத்தால் அச்சம் என பழநி நகராட்சி 26 வது வார்டு மக்கள் பரிதவிக்கின்றனர்.
பாளையம், பாரதிதாசன் சாலை, தம்புரான் தோட்டம், பாரதி நகர்,தெற்கு அண்ணா நகர் பகுதிகளை உள்ளடக்கிய இந்த வார்டில் பஸ் ஸ்டாண்ட் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள பார்க்கிங் செல்ல வாகனங்கள் பஸ் ஸ்டாண்டிற்குள் வந்து செல்ல வேண்டிய நிலை உள்ளது. டூவீலர்கள் பஸ் ஸ்டாண்டுக்குள் வருவதை தவிர்க்க பார்க்கிங் வழியை பாளையம் வழியே அமைக்க வேண்டும். வார்டில் குதிரைகள் அதிகம் திரிகின்றன. இதனால் கொசுத்தொல்லை என பல்வேறு பிரச்னைகள் உள்ளன.
கேமரா பொருத்துவது அவசியம்
சுப்பிரமணி, தெற்கு அண்ணா நகர் : தெற்கு அண்ணா நகர் பகுதியில் குடிநீர் குழாய் இணைப்பிற்காக தோண்டப்பட்ட சாலைகள் சரி செய்யவில்லை .இதனால் வாகன ஓட்டுனர்கள் சிரமப்படுகின்றனர். இப்பகுதியில் வெளி ஆட்கள் நடமாட்டம் அதிகம் உள்ளதால் கண்காணிப்பு கேமரா பொருத்த வேண்டியது அவசியம்.
அச்சத்தில் பெண்கள்
புண்ணிய சிவா ,பாரதிதாசன் சாலை:பாரதிதாசன் சாலை பகுதியில் இரவு நேரத்தில் வெளிநபர்கள் நடமாட்டம் அதிகமாக உள்ளது. பாரதிதாசன் சாலையில் இருபுறமும் வாகனங்கள் நிறுத்தப்படுவதால் வாகன ஓட்டுனர்கள் சிரமம் அடைகின்றனர். போக்குவரத்து இடையூறும் ஏற்படுகிறது. வெளி நபர்கள் நடமாட்டத்தால் பெண்கள் அச்சத்துடன் உள்ளனர்.
நோய் தொற்று அபாயம்
கணேசன், பாளையம்: நாய், பன்றிகள் அதிக அளவில் சுற்றி வருகின்றன. இதனால் நோய் தொற்று பரவும் அபாயம் உள்ளது .வையாபுரி குளத்து பகுதியில் பொதுப்பணித்துறையினர் வேலி அமைக்க வேண்டும். குளத்தில் குப்பை கொட்டுவதை தவிர்க்க வேண்டும். சேதமடைந்த சாலைகளை சீரமைக்க வேண்டும்.
நாய் தொந்தரவு குறைகிறது
சுதா , கவுன்சிலர் (தி.மு.க.,) : வார்டு பகுதியில் குப்பை முறையாக அள்ளப்படுகின்றன. தெருவிளக்கு பிரச்னைகள் எதுவும் இல்லை.
நாய் தொந்தரவு குறைந்து வருகிறது. வார்டு முழுவதும் வெளிநபர்களின் நடமாட்டம் அதிகரித்து உள்ளதால் போலீசார் ரோந்து பணியை தீவிர படுத்த வலியுறுத்தப்பட்டுள்ளது. கண்காணிப்பு கேமரா அமைக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும். போலீசார் கண்காணிப்பில் ஈடுபட்டால் குற்ற செயல்கள் நடைபெறாமல் தடுக்கலாம் என்றார்.