/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
பஸ் ஸ்டாண்டில் பழைய சுவர்கள் அகற்றம்
/
பஸ் ஸ்டாண்டில் பழைய சுவர்கள் அகற்றம்
ADDED : ஜூன் 07, 2024 07:05 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டுக்கல்: திண்டுக்கல் நகரில் மழை பெய்ததில் பல பகுதிகளில் உள்ள பழைய கட்டடங்கள் இடிந்து விழும் நிலை ஏற்பட்டது. மாநகராட்சி கட்டுப்பாட்டிலிருக்கும் பஸ் ஸ்டாண்டிலிலும் பழைய கட்டட கூரை இடிந்ததில் பயணிகள் காயமடைந்தனர். நேற்று முன்தினம் இங்குள்ள கடை ஒன்றின் முன்பக்க சுவர் இடிந்து விழுந்தது.
இதை தொடர்ந்து கமிஷனர் ரவிச்சந்திரன் பஸ் ஸ்டாண்ட் பகுதியில் செயல்படும் கட்டடங்களை ஆய்வு செய்து இடியும் நிலையில் உள்ள முன் பக்க சுவர்களை அகற்ற உத்தரவிட்டார். அதன்படி நேற்று மாநகராட்சி ஊழியர்கள் திண்டுக்கல் பஸ் ஸ்டாண்டில் இடியும் நிலையில் உள்ள சுவர்களை மண் அள்ளும் இயந்திரம் மூலம் அகற்றினர்.