ADDED : ஜூலை 29, 2024 12:34 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பழநி: பழநி புது தாராபுரம் ரோடு இரண்டு வழிச்சாலையாக விரிவாக்கம் செய்யும்பணிகள் நடந்தது.
இதனை முதல்வரின் ரோடு விரிவாக்க திட்டத்தில் ரூ. 97 கோடி செலவில் நான்கு வழிச்சாலையாக மாற்ற பணிகள் நடக்கின்றன. இதனை நேற்று முன்தினம் மதுரை வட்ட நெடுஞ்சாலை துறை கண்காணிப்பு பொறியாளர் ரமேஷ் ஆய்வு செய்தார். 13 கிலோமீட்டர் நடந்த ஆய்வில் பழநி கோட்டப் பொறியாளர் குமணன், உதவி கோட்ட பொறியாளர் பாபுராமன், உதவி பொறியாளர் ஜெயபாலன் உடன் இருந்தனர்.