/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
குடிநீர் கேட்டு ஆவணங்களை ஒப்படைக்க வந்த மக்கள் குறைதீர் கூட்டத்தில் 453 பேர் முறையீடு
/
குடிநீர் கேட்டு ஆவணங்களை ஒப்படைக்க வந்த மக்கள் குறைதீர் கூட்டத்தில் 453 பேர் முறையீடு
குடிநீர் கேட்டு ஆவணங்களை ஒப்படைக்க வந்த மக்கள் குறைதீர் கூட்டத்தில் 453 பேர் முறையீடு
குடிநீர் கேட்டு ஆவணங்களை ஒப்படைக்க வந்த மக்கள் குறைதீர் கூட்டத்தில் 453 பேர் முறையீடு
ADDED : செப் 16, 2025 04:50 AM
திண்டுக்கல்: குடி நீர் கேட்டு ஆவணங்களை ஒப்படைக்க வந்த மக்கள், நிலத்தை மீட்டுக் கொடுங்க, வண்டிப்பாதை ஆக்கிரமிப்பு என்பன உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகள் தொடர்பாக கலெக்டர் அலுவலகத்தில் நடந்த மக்கள் குறைதீர் கூட்டத்தில் 453 பேர் மனுக்கள் வாயிலாக முறையிட்டனர்.
கலெக்டர் சரவணன் தலைமையில் நடந்த இக்கூட்டத்தில் பெறப்பட்ட மனுக்கள் சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் வழங்கி தகுதியான மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தப்பட்டது. மாற்றுத்திறனாளிகள் 5 பேருக்கு தையல் இயந்திரங்களை கலெக்டர் வழங்கினார்.
குஜிலியம்பாறை வெம்பூரை அடுத்த செல்லக்குட்டியூரை சேர்ந்த கிராம மக்கள் குடியுரிமை ஆவணங்களான ரேஷன் கார்டு, ஆதார் அட்டை, வாக்காளர் அடையாளர் அட்டை உள்ளிட்டவற்றை ஒப்படைக்கப் போவதாக கூறி கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தனர்.
அவர்கள் கூறுகையில், 'இலவச குடிநீர் இணைப்பு பெற முடியாமல் பல ஆண்டுகளாக தவித்து வருகிறோம். குடிநீர் இணைப்பை பெற விடாமல் தடுப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பலமுறை புகார் கொடுத்தோம். ஆனால் நடவடிக்கை எடுக்கவில்லை.
இதனால் எங்கள் குடியுரிமை ஆவணங்களை கலெக்டர் அலுவலகத்தில் ஒப்படைக்க வந்துள்ளோம்' என்றனர்
நிலக்கோட்டை தாலுகா தாதன்குளம் பிள்ளையார் கோயில் தெருவை சேர்ந்த கலாராணி கொடுத்த மனுவில், எங்களுக்கு சொந்தமான நிலம் தாதன்குளம் பகுதியில் உள்ளது. அதை சிலர் போலி ஆவணங்கள் மூலம் விற்பனை செய்துவிட்டனர். அவர்களிடம் இருந்து நிலத்தை மீட்டுக்கொடுக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார். வடமதுரை ஆர்.எஸ்.ரோடு பகுதியை சேர்ந்த சந்தோஷ்குமார் கொடுத்த மனுவில், வடமதுரையில் இருந்து காணப்பாடிக்கு செல்லும் சாலை, வடமதுரை ரயில்வே கேட் பகுதியில் உள்ள சாலை ஆகிய பகுதிகளில் உள்ள வண்டிப்பாதை ஆக்கிரமிப்பின் பிடியில் உள்ளது.
மீட்டுக்கொடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும் என குறிப்பிட்டிருந்தார்.