ADDED : ஜன 26, 2024 05:55 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வேடசந்துார்: நாமக்கல் மாவட்டம் துறையூரை சேர்ந்தவர் டிரைவர் சரவணன் 38. இவர் திண்டுக்கல்லில் இருந்து சேலம் நோக்கி ரீப்பர் கட்டைகளை ஏற்றியப்படி சரக்கு வேனில் சென்றார்.
வேடசந்துார் ரங்கநாதபுரம் அருகே சென்ற போது டயர் வெடித்தது. கட்டுப்பாட்டை இழந்த வேன் சென்டர் மீடியலில் ஏறி கவிழ்ந்தது. டிரைவர் காயமின்றி தப்பினார். நெடுஞ்சாலை ரோந்து போலீசார் கிரேன் உதவியுடன் வேனை அகற்றினர். கூம்பூர் போலீசார் விசாரிக்கின்றனர்.

