/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
புகையிலை விற்றவருக்கு ஒரு நாள் சிறை
/
புகையிலை விற்றவருக்கு ஒரு நாள் சிறை
ADDED : பிப் 06, 2024 07:20 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டுக்கல் : புகையிலை விற்பனை செய்ய கொண்டு வந்தவருக்கு ரூ. 20,000 அபராதம், ஒருநாள் சிறை தண்டனை விதித்து திண்டுக்கல் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
திண்டுக்கல் எரியோடு பகுதியைச் சேர்ந்தவர் பழனியப்பன் 50. 2022-ல் எரியோட்டிலிருந்து திண்டுக்கல்லுக்கு 100 கிலோ புகையிலை பொருட்களை விற்பனை செய்ய எடுத்து வந்தார்.
திண்டுக்கல் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் புகையிலை பொருட்களை பறிமுதல் செய்து குற்ற வழக்கு பதிந்தனர்.
இதன் வழக்கு திண்டுக்கல் ஜே.எம்.1 நீதிமன்றத்தில் நடந்தது. விசாரித்த நீதிபதி பிரியா குற்றவாளி பழனியப்பனுக்கு ரூ.20,000 அபராதம், ஒரு நாள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.