/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
அங்கித்திவாரி ஜாமின் மனு பிப்.5க்கு ஒத்திவைப்பு
/
அங்கித்திவாரி ஜாமின் மனு பிப்.5க்கு ஒத்திவைப்பு
ADDED : பிப் 02, 2024 01:09 AM
திண்டுக்கல்:லஞ்ச வழக்கில் கைதான மதுரை அமலாக்கத்துறை அதிகாரி அங்கித்திவாரி ஜாமின்மனு விசாரணையை திண்டுக்கல் நீதிமன்றம் பிப்.5க்கு ஒத்திவைத்தது.
திண்டுக்கல் அரசு மருத்துவமனை துணை கண்காணிப்பாளர் டாக்டர் சுரேஷ்பாபுவை சொத்து குவிப்பு வழக்கிலிருந்து விடுவிப்பதாக கூறி மதுரை அமலாக்கத்துறை அதிகாரி அங்கித்திவாரி ரூ.40 லட்சம் லஞ்சம் வாங்கியதாக தமிழக லஞ்சஒழிப்பு போலீசாரால் டிச.1ல் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில் 4 முறை நீதிமன்ற காவல் நீட்டிப்பு செய்யப்பட்டு அவர் மதுரை சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் திண்டுக்கல் தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர் செல்வம், அங்கித்திவாரிக்கு ஜாமின்கோரி 2வது முறையாக ஜன.30ல் மனு தாக்கல் செய்தார். நடுவர் மோகனா முன்னிலையில் அது நேற்று விசாரணைக்கு வந்தது. லஞ்ச ஒழிப்பு துறை தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் அனுராதா, வழக்கு தொடர்பாக புலன் விசாரணை செய்ய உச்சநீதிமன்றம் தடை விதித்து உத்தரவிட்டதால் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய முடியவில்லை என ஜாமினுக்கு ஆட்சேபனை தெரிவித்தார். இருதரப்பு வாதத்தையும் கேட்ட நடுவர், மனு விசாரணையை பிப்.5க்கு ஒத்தி வைத்து உத்தரவிட்டார்.

