/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
ஆண்டிபட்டி கோயில் கும்பாபிஷேகம்
/
ஆண்டிபட்டி கோயில் கும்பாபிஷேகம்
ADDED : ஜன 27, 2024 04:34 AM

வடமதுரை : தென்னம்பட்டி அருகே ஆண்டிபட்டியில் ஸ்ரீவீரசின்னம்மாள், வீரசின்னையா, கற்பக கணபதி, மலேசிய முருகன், கருப்பசுவாமி கோயில் கும்பாபிஷேகம் நடந்தது.
இதையொட்டி நேற்றுமுன்தினம் மாலை தீர்த்தம், முளைப்பாரி அழைப்புடன் துவங்கிய விழாவில் 2 கால யாக பூஜைகள் நடந்தன. நேற்று காலை கடங்கள் புறப்பாடாகி கும்பங்களில் புனித நீருற்ற கும்பாபிஷேகம் நடந்தது. திண்டுக்கல் ரவுண்ட் ரோடு கற்பக கணபதி கோயில் அர்ச்சகர் காந்திகிருஷ்ணன் தலைமையிலான குழுவினர் நடத்தி வைத்தனர். வேடசந்துார் எம்.எல்.ஏ., காந்திராஜன், முன்னாள் எம்.எல்.ஏ., க்கள் பழனிச்சாமி, பரமசிவம், ஊராட்சி தலைவர்கள் பத்மாவேல்முருகன், கோமதிபாலசுப்பிரமணி, வீராச்சாமி, முன்னாள் ஒன்றிய துணைத் தலைவர் சொக்கலிங்கம், தி.மு.க., ஒன்றிய செயலாளர் சுப்பையன், நகர செயலாளர் கணேசன் பங்கேற்றனர். ஏற்பாட்டினை திருமலை வாழ் குல பங்காளிகள் செய்திருந்தனர்.

