/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
வரி செலுத்தியும் வசதிகளை கேட்பது சமூக குற்றமா: ராஜகணபதி நகர் குடியிருப்போர் குமுறல்
/
வரி செலுத்தியும் வசதிகளை கேட்பது சமூக குற்றமா: ராஜகணபதி நகர் குடியிருப்போர் குமுறல்
வரி செலுத்தியும் வசதிகளை கேட்பது சமூக குற்றமா: ராஜகணபதி நகர் குடியிருப்போர் குமுறல்
வரி செலுத்தியும் வசதிகளை கேட்பது சமூக குற்றமா: ராஜகணபதி நகர் குடியிருப்போர் குமுறல்
ADDED : ஜன 17, 2024 12:57 AM

திண்டுக்கல் : வரிகள் முழுமையாக செலுத்துகிறோம்,அடிப்படை வசதிகள் கேட்டு ஊராட்சி, அதிகாரிகள் மட்டத்தில் முறையிடுகிறோம், நடவடிக்கை  இல்லாததால் தினமலர் நாளிதழில் ஆதங்கத்தை கொட்டி தீர்ப்பதை சமூக குற்றம் போல் பாவிக்கின்றனர் என   கூறினர்  திண்டுக்கல் ராஜகணபதி நகர் குடியிருப்போர்.
திண்டுக்கல் தாடிக்கொம்பு ரோடு எம்.வி.எம்.மகளிர் கல்லுாரி பின்புறமுள்ள ராஜகணபதி நகர் குடியிருப்போர் நலச்சங்க தலைவர் ஜெயராமன், செயலாளர் லட்சுமிதேவி, செயற்குழு உறுப்பினர்கள் சின்னதம்பி, உமா மகேஷ்வரி,சாந்தி கூறியதாவது:  ஐந்து ஆண்டுகளாக குரும்பபட்டி ஊராட்சி கிராம சபை கூட்டத்தில்  குடியிருப்பு பகுதிகளின் அடிப்படை வசதிக்காக மனு கொடுத்தும் வளர்ச்சி பணி   அறவே இல்லாமல்  உள்ளது. அதிகாரிகள் தரப்பில் அடிப்படை வசதிக்காக புகார் மனுக்கள் கொண்டு சென்றாலும் நடவடிக்கை கானல் நீராக உள்ளது. வேதனை பொறுக்காமல் தினமலர் நாளிதழில்   ஆதங்கத்தை கொட்டி தீர்த்தால் ஊராட்சி நிர்வாகத்தின் கோபத்திற்கு ஆளாக வேண்டியுள்ளது. நாங்கள்  அடிப்படை வசதிகள் கேட்பதை சமூக குற்றம் போல் பாவிக்கின்றனர் வரிகள் முழுமையாக செலுத்தியும் உரிமைகள் மறுக்கப்பட்டால் யாரிடம் சென்று முறையிடுவது என தமிழக அரசுதான் எங்களுக்கு பதிலளிக்க வேண்டும்.
ராஜகணபதி நகரில் செம்மண், ஜல்லிகற்கள் கொண்டு மெட்டல் ரோடு என பெயரளவில் போட்டு சென்றுள்ளனர். இந்த ரோடானது வெறும் 12 அடியில் மட்டுமே உள்ளது. இந்த ரோடும் சமீபத்தில் பெய்த மழையால் பக்கவாட்டில் அரிப்பு ஏற்பட்டு மேலும் குறுகலாகி வருகிறது. இந்த நிலையில் தார்ரோடு போட நிதியில்லை என தன்னிலை விளக்கம் கொடுக்கும் ஊராட்சி நிர்வாகத்தை நினைத்து சிரிப்பதா, அழுவதா என தெரியவில்லை. இந்த அரைகுறை ரோடும் மீனாட்சி நாயக்கன்பட்டி அரசு உயர்நிலைப்பள்ளி மாணவர்களின் வேண்டுகோளுக்கிணங்க கலெக்டர் சிறப்பு நிதியிலிருந்துதான்  போடுவதாக கூறுகின்றனர். மொத்தத்தில் குடியிருப்போர் நலனுக்காக ஊராட்சி நிர்வாகம் சார்பில் ஏதும்செய்ததாகவே தெரியவில்லை.
தெருவிளக்கு வசதி அறவே இல்லாததால் அருகிலுள்ள மூன்று பள்ளிகள், ஒரு மகளிர் கல்லுாரி, மருத்துவமனை ஊழியர்கள்   இரவில் நடமாட அஞ்சுகின்றனர் . இருளை சாதகமாக்கி சமூக விரோத
கும்பல்கள் இரவானால் கொட்டமடிக்கின்றன. போலீஸ் ஸ்டேஷன் கண்காணிப்பில் கேமரா பொருத்தி நடவடிக்கை எடுத்தால்தான் சமூக குற்றங்கள் குறையும்.
ஜல்ஜீவன் திட்டத்தில் எங்கள் குடியிருப்புகளை தாண்டி செல்லும் வாட்டர் பைப் லைன் எங்கள் பகுதிக்குள்
நுழையாது என அதிகாரிகள் தரப்பில் கூறுவது வேடிக்கையாக உள்ளது. தெருவின் முனையில் குவியும் குப்பையால் சுகாதாரக்கேடு ஏற்படுகிறது. கோழி கழிவுகளும், தனியார் திருமண மண்டபங்களின் எச்சி  இலை குப்பையும்  ஒருசேர கொட்டி செல்கின்றனர்.
இந்த சூழலில் எங்கள் பகுதியினர் எப்படித்தான் அன்றாட வாழ்வை ஓட்ட முடியும் . அதிகாரிகள் தரப்பில்தான் பதில் சொல்ல வேண்டும். அங்குநகர் எதிரில் உள்ள மழைநீர் சேகரிப்பு குளம் சீரமைப்பு பணி இல்லாமல் உள்ளது. இதனருகில் கொட்டப்படும் குப்பையால்   விஷபூச்சிகளின் தாண்டவம் ஏரியா முழுவதும் நிறையவே உள்ளது. உடனடி  நடவடிக்கை எடுத்து குளத்தின் எழிலை காக்க வேண்டும் என்றனர்.

