நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வடமதுரை : முன்னாள் முதல்வர் கருணாநிதி நுாற்றாண்டு விழாவை முன்னிட்டு அய்யலுார் நகர தி.மு.க., கிளாசிக் கிரிக்கெட் கிளப் சார்பாக கிரிக்கெட் போட்டி நடந்தது.
இதற்கான பரிசளிப்பு விழா பேரூராட்சி தலைவர் கருப்பன் தலைமையில் நடந்தது. வடமதுரை ஒன்றிய செயலாளர் சுப்பையன், நகர செயலாளர் கணேசன் முன்னிலை வகித்தனர். மாவட்ட மாணவர் அணி அமைப்பாளர் தினேஷ், விளையாட்டு மேம்பாட்டு அணி பொறுப்பாளர் சுப்பையா, பேரூராட்சி துணை த்தலைவர் செந்தில், கவுன்சிலர்கள் முருகேஸ்வரி, சின்னச்சாமி, தனலட்சுமி பங்கேற்றனர்.

