நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சின்னாளபட்டி : சின்னாளபட்டி அரசு சமுதாய நல மையத்தில், கூடுதல் கட்டடம் குறித்து பல்வேறு தரப்பினர் கோரி வந்தனர். சுகாதார மானிய திட்டத்தில் ரூ.50 லட்சம் மதிப்பீட்டில் நவீன மருத்துவ வசதிகளுடன் கட்டடம் அமைக்க அமைச்சர் ஐ.பெரியசாமி உத்தரவிட்டார்.
இதற்கான பூமி பூஜை, நேற்று ஆத்துார் கிழக்கு ஒன்றிய தி.மு.க., செயலாளர் முருகேசன் தலைமையில் நடந்தது. பேரூராட்சி தலைவர் பிரதீபா, செயல் அலுவலர் செல்வராஜ், வட்டார மருத்துவ அலுவலர் ஆனந்தீஸ்வரி முன்னிலை வகித்தனர்.

