/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
தலையில் தேங்காய் உடைத்து நேர்த்திக்கடன்
/
தலையில் தேங்காய் உடைத்து நேர்த்திக்கடன்
ADDED : ஜூன் 08, 2025 04:25 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கொடைரோடு : ஜெ.ஊத்துப்பட்டி மாலம்மாள், சென்னப்பன், கருப்பணசுவாமி கோயில் கும்பிடு விழாவில் முதல் நாள் சேர்வையாட்டம், கரகாட்டம் நடந்தது.
2ம் நாள் அபிஷேகம் , தீபாராதனை நடந்தது. கோயில் கம்பத்தடியில் தீபம் ஏற்றியபின்பு கோயில் பூஜாரி மார்பில் கத்திபோடும் நிகழ்ச்சி நடந்தது.இதை தொடர்ந்து கோவிந்தா கோஷம் முழங்க பக்தர்கள் தலையில் கோயில் பூஜாரி தேங்காய்களை உடைத்தார். ஏற்பாடுகளை ஊர்கவுன்டர் முருகன், பூசாரி மாலையன், வெள்ளரசு முருகன், பி.மாலையன், லகுமையா, குருக்கள் மணி அய்யர் குரும்பர் இனமக்கள் விழா கமிட்டியர் செய்தனர்.