/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
பராமரிப்பு இல்லாத விளம்பர போர்டுகள், பேனர்களை அகற்றலாமே
/
பராமரிப்பு இல்லாத விளம்பர போர்டுகள், பேனர்களை அகற்றலாமே
பராமரிப்பு இல்லாத விளம்பர போர்டுகள், பேனர்களை அகற்றலாமே
பராமரிப்பு இல்லாத விளம்பர போர்டுகள், பேனர்களை அகற்றலாமே
ADDED : ஜூன் 06, 2025 03:08 AM

மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் போக்குவரத்து நிறைந்த , மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள இடங்களில் மெதுவாக செல்ல வேண்டும் என்பதை அறிவுறுத்தும் வகையில் விட்டு விட்டு எரியும் ஒளிரும் விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளன. தங்களது நிறுவனத்தை அடையாளம் காட்டும் வகையில் அவற்றின் பெயர்கள் எழுதப்பட்டு ரோட்டின் நடுவில் வைக்கப்பட்டுள்ளன.இவை அமைக்கப்பட்ட பல ஆண்டுகள் ஆகிவிட்டன. மழை, வெயிலால் இந்த போர்டுகள் பாதிக்கப்பட்டு அதன் ஸ்திரத்தன்மையை இழந்து விடுகிறது. நாளடைவில் இவை கீழே விழுவதற்கு தயாரான நிலையில் உள்ளது.
இவற்றை கவனமாக பார்த்து அப்புறப்படுத்தப்படாமல் விட்டால் காற்று வீசும் போது கீழே விழுந்து பெரும் விபத்தை ஏற்படுத்த காரணமாக அமைந்துவிடுகிறது.
இதனால் ரோட்டில் செல்லும் வாகனங்கள் பொதுமக்கள் பாதிக்கப்படும் வாய்ப்பு உள்ளது. உயிர்ப்பலி ஏற்படுத்தும் இத்தகைய போர்டுகளை கண்டறிந்து அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இதேபோல் கட்டடங்களின் மேல் பெரிய பிளக்ஸ் போர்டுகள் வைக்கப்பட்டுள்ளது. ஆடி காற்று வீசும்போது இவையும் கீழே விழுவதற்கு வாய்ப்பு உள்ளது.
விழும் நிலையில் உள்ள விளம்பர போர்டுகளை கண்டறிந்து அவற்றை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.