/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
தமிழக கிரிக்கெட் அணியில் திண்டுக்கல் வீரர்கள் -
/
தமிழக கிரிக்கெட் அணியில் திண்டுக்கல் வீரர்கள் -
ADDED : ஜன 10, 2024 06:44 AM

திண்டுக்கல் : ரஞ்சி கோப்பை போட்டிக்கு தமிழக அணிக்கு 2 வீரர்கள் திண்டுக்கல் மாவட்டத்திலிருந்து தேர்வாகி உள்ள நிலையில் அவர்களை மாவட்ட கிரிக்கெட் சங்கத்தினர் பாராட்டினர்.
இந்திய கிரிக்கெட் கட்டுப்பாடு வாரியம் சார்பாக தற்போது ரஞ்சி கோப்பை போட்டிகள் நடந்து வருகின்றன.இதில் தமிழக அணியில் திண்டுக்கல் மாவட்டத்திலிருந்து 2 வீரர்கள் தேர்வாகி விளையாடி வருகின்றனர்.
குஜராத்தில் நடைபெற்ற முதல் ரஞ்சி போட்டியில் திண்டுக்கல் வீரர் முகம்மது அபாரமாக விளையாடி 5 விக்கெட்டுகள் , 85 ரன்களை எடுத்துள்ளார்.
திரிபுரா மாநிலத்தின் அகர்த்தலா நகரில் நடைபெற இருக்கும் 2வது போட்டியில் கன்னிவாடி நெட்டியபட்டியைச் சேர்ந்த விவசாயி மகன் பூபதி வைஷ்ணவ குமார் தேர்வாகி மாவட்டத்திற்கு பெருமை சேர்த்துள்ளார்.
இவர் சேலத்தில் நடைபெற்றசி.கே.நாயுடு கோப்பையில் சட்டீஸ்கர் அணிக்கு எதிராக 155 ரன்களை எடுத்து தேர்வானார். இவர்கள் இருவருமே திண்டுக்கல் மாவட்ட லீக் போட்டிகளில் செயின்ட் பீட்டர்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இவர்களை மாவட்ட கிரிக்கெட் சங்க தலைவர்ரகுராம், உதவி தலைவர்கள்வெங்கட்டராமன் , சித்தாந் ரோகன், செயலாளர் அமர்நாத், இணைச் செயலாளர்கள் ராஜமோகன், மகேந்திர குமார், காசாளர் முத்துகுமார் பாராட்டினர்.

