/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
பஸ் ஸ்டாண்ட் கட்டடம் திறப்பது எப்போது பழநி நகராட்சி கூட்டத்தில் விவாதம்
/
பஸ் ஸ்டாண்ட் கட்டடம் திறப்பது எப்போது பழநி நகராட்சி கூட்டத்தில் விவாதம்
பஸ் ஸ்டாண்ட் கட்டடம் திறப்பது எப்போது பழநி நகராட்சி கூட்டத்தில் விவாதம்
பஸ் ஸ்டாண்ட் கட்டடம் திறப்பது எப்போது பழநி நகராட்சி கூட்டத்தில் விவாதம்
ADDED : பிப் 24, 2024 04:32 AM
பழநி, : பழநி நகராட்சி கூட்டத்தில் பஸ் ஸ்டாண்ட் கட்டடம் திறப்பது எப்போது என கவுன்சிலர்கள் கேள்வி எழுப்பினர்.
பழநி நகராட்சி கூட்டம் தலைவர் உமாமகேஸ்வரி (தி.மு.க.,) தலைமையில் நடந்தது. துணைத் தலைவர் கந்தசாமி, நகர்நல அலுவலர் மனோஜ் குமார் முன்னிலை வகித்தனர். கவுன்சிலர்கள் விவாதம்:
தீனதயாளன் (தி.மு.க.,): தைப்பூச விழாவில் ஒத்துழைப்பு அளித்த நகராட்சிக்கு நன்றி. பங்குனி உத்திர திருவிழாவில் வெள்ளி தேர் ஓடும் சன்னிதி வீதியை சரிசெய்ய வேண்டும்.
தலைவர் : பொறியாளருடன் ஆலோசித்து நடவடிக்கை எடுக்கப்படும்.
வீரமணி (தி.மு.க.,): தேவஸ்தான அதிகாரிகளுக்கு நன்றி சொல்வது வீண். இட்டேரி ரோட்டில் தெருவிளக்கு அமைக்க வேண்டும்.
தலைவர் : தெருவிளக்கு அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
தீனதயாளன் (தி.மு.க.,): பட்ஜெட் தாக்கல் செய்ய வேண்டும்.
கந்தசாமி (மார்க்சிஸ்ட்): மக்களுடன் முதல்வர் திட்டத்தில் வாங்கிய மனுக்கள் இழுத்தடிப்பு செய்யப்படுகிறது.
தலைவர்: மன்றத்தில் வைக்கப்பட்டு குறைகளுக்கு தீர்வு காணப்படும்.
கந்தசாமி (மார்க்சிஸ்ட்): பொதுமக்களுக்கு பயன்படும் கிணற்று நீரை துாய்மை செய்ய வேண்டும்.
தலைவர்: அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தால் ஆய்வுசெய்து நடவடிக்கை எடுக்கப்படும். உள்நோக்குத்துடன் பேச வேண்டாம்.
கந்தசாமி (மார்க்சிஸ்ட்): உள்நோக்கத்துடன் பேச வில்லை. ராஜா நகர் பூங்காவிற்கு தண்ணீர் தேவை. வரிமாற்றம் செய்யும் விண்ணப்ப நிலை என்ன
தலைவர் : உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
காளீஸ்வரி (தி.மு.க.,): ஆதார் பொதுசேவை மைய செயல்பாடைசரிசெய்ய வேண்டும்.
தலைவர் : நடவடிக்கை எடுக்கப்படும்.
முருகேசன் (வி.சி.க.,): வார்டில் சாக்கடையை துார் வார வேண்டும்.
வீரமணி (தி.மு.க.,): இட்டேரி ரோட்டில் உள்ள சாக்கடையை துார்வார வேண்டும்.
தலைவர் : நகரில் மூன்று இடங்களில் சாக்கடை மாற்றி அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
முருகேசன் (வி.சி.க.,): இறைச்சி வதை கூடங்கள் நிலை என்ன.
நகர்நல அலுவலர்: வதைக்கூடம் தனியாக உள்ளது. மின், தண்ணீர் இணைப்பு வழங்க பட உள்ளது.
சரவணன் (தி.மு.க.,): நகராட்சி குப்பை சேகரிப்பு மையத்தில் சமுக வீரோதிகள் நடமாட்டம் உள்ளது. அதற்கு துணைபுரியும் ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சுரேஷ் (தி.மு.க.,): மாரியம்மன் கோயிலில் மாசி திருவிழா நடைபெற்று வருகிறது. அபிஷேகம் செய்ய படும் பால் சாக்கடையில் கலக்கிறது.
நகர்நல அலுவலர்: சோக்பிட் அமைத்து சரிசெய்யப்படும்.
சுரேஷ் (தி.மு.க.,): நகராட்சி கடைகளுக்கு ஒரு ஆண்டு வாடகை முன் பணம் கேட்கப்பட்டுள்ளது. இது குறித்து நகர்மன்றத்திற்கு தெரிவிக்கப்படவில்லை. தன்னிச்சையாக செயல்படுவது ஏற்கத்தக்கதல்ல
தலைவர் : நகராட்சி மூலம் நிறைவேற்றப்படும் புதிய வழிமுறைகள் மன்றத்தில் வைக்கப்பட வேண்டும்.
சுரேஷ் (தி.மு.க.,): பழைய நகராட்சி அலுவலக கட்டடத்தை வருவாய் ஈட்டக்கூடிய அமைப்பாக மாற்ற வேண்டும்.
தலைவர் : வணிக வளாகம் ஆக மாற்ற ஆலோசிக்கப்படும்.
விமலபாண்டியன் (தி.மு.க.,): அடிவாரம் ஆக்கிரமிப்பு அகற்றத்தில் பாதிக்கப்பட்ட சாலையோர வியாபாரிகளுக்கு உதவ வேண்டும்.
தலைவர் : சாலையோர வியாபாரிகளுக்கு உறுதுணையாக எப்போதும் இருப்போம்.
சுரேஷ் (தி.மு.க.,): பஸ் ஸ்டாண்ட் கட்டடம் திறப்பது எப்போது.
தலைவர் : இந்த மாதத்திற்கு பஸ் ஸ்டாண்ட் கட்டடம் நகராட்சியிடம் ஒப்படைக்கப்பட உள்ளது.
செபாஸ்டின் (தி.மு.க): நகராட்சி சொத்து வரி, தண்ணீர் வரி இனங்கள் பாக்கி எவ்வளவு உள்ளது.
தலைவர் : ரூ .ஆறு கோடி வசூல் செய்யப்பட்டுள்ளது. ரூ.11 கோடி நிலுவையில் உள்ளது.
தீனதயாளன் (தி.மு.க.,): தேர்தல் போது பழைய நிலுவை வரிபாக்கி வசூல் செய்ய கட்டாயப்படுத்துவதால் அரசுக்கு அவப்பெயர் ஏற்படுகிறது.
செபாஸ்டின் (தி.மு.க.,): வணிக வளாகத்தின் பரிபாக்கியை 6 மாதத்திற்கு ஒரு முறை வசூல் செய்ய வேண்டும் அவர்களுக்கு நிலுவை வைக்கக்கூடாது.
இவ்வாறு விவாதம் நடந்தது.