/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
மண் திருடர்களால் மாவட்ட நீர்நிலைகள் காணவில்லை! பாதாள குழிகளால் தொடரும் விபத்துக்கள்
/
மண் திருடர்களால் மாவட்ட நீர்நிலைகள் காணவில்லை! பாதாள குழிகளால் தொடரும் விபத்துக்கள்
மண் திருடர்களால் மாவட்ட நீர்நிலைகள் காணவில்லை! பாதாள குழிகளால் தொடரும் விபத்துக்கள்
மண் திருடர்களால் மாவட்ட நீர்நிலைகள் காணவில்லை! பாதாள குழிகளால் தொடரும் விபத்துக்கள்
ADDED : பிப் 02, 2024 12:33 AM

மலையிலிருந்து உருவாகும் நீர் வாய்க்கால்களின் வரத்து நீராக பல்வேறு அணைகள், கிராமப்புற கண்மாய்களின் பாசனம், தண்ணீர் ஆதாரம் வழங்குபவையாக அமைந்துள்ளன. நிலத்தடி நீர்மட்டம் உயர்த்துதல் மட்டுமின்றி அடிப்படை குடிநீர் ஆதாரமாகவும் பெரும்பாலானவை அமைந்துள்ளன.
ஒன்றியம் வாரியாக ஆத்துார் 118, பழநி 45, ஒட்டன்சத்திரம் 96, நத்தம் 568, தொப்பம்பட்டி 221, வேடசந்துார் 119, வத்தலகுண்டு 85, குஜிலியம்பாறை 221, சாணார்பட்டி 508, நிலக்கோட்டை 181, வடமதுரை 127, ரெட்டியார்சத்திரம் 119, திண்டுக்கல் 131 என 2539 நீர் நிலைகள் மாவட்ட நிர்வாக பட்டியலில் இடம்பெற்றுள்ளன. இதுதவிர 100 ஏக்கருக்கு கூடுதலான பரப்புள்ள 107 கண்மாய்கள் பொதுப்பணித்துறை பராமரிப்பில் உள்ளன.
பெரும்பாலானவற்றின் நீர்பிடிப்பு வழித்தடம், வரத்து வாய்க்கால்கள் ஆக்கிரமிப்பு ,பராமரிப்பின்றி துார்ந்து உள்ளன. பல இடங்களில் குடிமராமத்து பணி நடந்து பல கோடி ரூபாயில் முறைகேடுகள் அரங்கேறின. இவற்றை பராமரிக்கும் அரசுத்துறை அமைப்புகளின் அலட்சியத்தால் மழை நீர் சம்பந்தப்பட்ட நீராதாரங்களை வந்தடைவதில் சிக்கல் நீடிக்கிறது.போதாக்குறைக்கு விவசாய பயன்பாடு என்ற பெயரில் கரிசல் மண் துவங்கி வண்டல் மண், சவுடு மண், செம்மண், மணல் போன்றவை முறைகேடாக மாவட்டம் முழுவதும் பரவலாக நீர் நிலைகளில் இருந்து திருடப்பட்டு வருகிறது.
போலி அனுமதி லாரிகளுக்கான நடைச்சீட்டு போன்றவற்றை பயன்படுத்தி நிர்ணயித்த அளவிற்கு பல மடங்கு கூடுதலாக மண் எடுக்கப்படுகிறது.
இதையடுத்து நீர்தேக்கங்கள் மட்டுமின்றி வரத்து வாய்க்கால்கள், கண்மாய் என என அனைத்து நீர் நிலைகளிலும் தங்கள் கைவரிசையை காட்டி வருகின்றனர்.
இவற்றில் பெரும்பாலானவை பாதாள குழிகளுடன் நிலக்கரி சுரங்கம் போன்று தோண்டப்பட்டு உள்ளது.
இவை விபத்து அபாயத்துடன் நிலத்தடி நீர்மட்டத்தையும் வெகுவாக பாதிக்கும் அவலத்தை ஏற்படுத்தி உள்ளன.
வருவாய், போலீஸ், கனிமவளத்துறை அதிகாரிகளை ஒருங்கிணைத்து மண் திருட்டை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மாவட்ட நிர்வாகம் மேற்கொள்ள வேண்டும்.

