/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
போதையில்லா தமிழகம் விழிப்புணர்வு மாரத்தான்
/
போதையில்லா தமிழகம் விழிப்புணர்வு மாரத்தான்
ADDED : அக் 13, 2025 05:51 AM
வத்தலக்குண்டு :  புதிய தலைமுறை ரோட்டரி சங்கம் மற்றும் இந்திய மருத்துவ சங்கம் சார்பில் போதையில்லா தமிழகம்   விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டம் நடந்தது.
ரோட்டரி சங்கத் தலைவர் செல்வராஜ் தலைமை வகித்தார். செயலாளர் கிருபாகரன் முன்னிலை வகித்தார். பொருளாளர் சேகர் வரவேற்றார். வத்தலக்குண்டு பேரூராட்சி அலுவலகம் முன்பு மாரத்தானை பேரூராட்சி  தலைவர் சிதம்பரம், நிலக்கோட்டை டி.எஸ்.பி., செந்தில்குமார் துவக்கி வைத்தனர். மாணவர்கள் தனிமனித ஒழுக்கம் குறித்து உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.
ஆண்கள்,பெண்கள் என இரண்டு பிரிவாக திண்டுக்கல்,  மதுரை ரோட்டில்  5 கி.மீ  தூரம் நடந்த  மாரத்தான் ஓட்டம் ரோட்டரி உள் விளையாட்டு அரங்கில் முடிந்தது.
சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சியில் பேரூராட்சி செயல் அலுவலர் சரவணகுமார், ரோட்டரி சங்க நிர்வாகிகள் நஜ்முதீன், முருகபாண்டியன், பத்ரி நாராயணன், ராஜ்குமார், அலெக்ஸாண்டர் பங்கேற்றனர்.

