/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
ஆக்கிரமிப்பு: 20 ஆண்டுகளாக மனு அளித்தும் பயனில்லை குறைதீர் கூட்டத்தில் முறையீடு
/
ஆக்கிரமிப்பு: 20 ஆண்டுகளாக மனு அளித்தும் பயனில்லை குறைதீர் கூட்டத்தில் முறையீடு
ஆக்கிரமிப்பு: 20 ஆண்டுகளாக மனு அளித்தும் பயனில்லை குறைதீர் கூட்டத்தில் முறையீடு
ஆக்கிரமிப்பு: 20 ஆண்டுகளாக மனு அளித்தும் பயனில்லை குறைதீர் கூட்டத்தில் முறையீடு
ADDED : ஜூலை 01, 2025 03:12 AM
திண்டுக்கல்: 20 ஆண்டுகளாக மனு அளித்தும் பயனில்லை, ஆக்கிரமிப்பு, மோசடி புகார் என்பன உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகள் தொடர்பாக மக்கள் குறைதீர் கூட்டத்தில் பலரும் முறையிட்டனர்.
கலெக்டர் சரவணன் தலைமையில் நடந்த இக்கூட்டத்தில் 382 க்கு மேற்பட்ட மனுக்கள் பெறப்பட்டன. கோரிக்கை மனுக்கள் சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் வழங்கி தகுதியான மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தப்பட்டது.
முதல்வர் பொது நிவாரண நிதியிலிருந்து 3 பேருக்கு தலா ரூ.1 லட்சம் வீதம் ரூ.3 லட்சத்திற்கான காசோலை வழங்கப்பட்டது.
பணி ஒய்வு பெறும் 11 பணியாளர்களுக்கு பொன்னாடை அணிவித்து கேடையம் வழங்கப்பட்டது.
திண்டுக்கல் நாகல்நகர் பகுதியை சேர்ந்த மாற்றுத்திறனாளி சுப்பிரமணி 80ல் அளித்த மனுவில், மாற்றுத்திறனாளி என்பதால் மற்றவர்களை போல் வேலைக்கு சென்று குடும்பம் நடத்த முடியவில்லை.
வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் ஆவின், பெட்டிக்கடை வைத்துத்தரக்கோரி 2005-ம் ஆண்டு முதல் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள், கலெக்டர் அலுவலகம் ஆகியவற்றில் மனு கொடுத்து வருகிறேன். 20 ஆண்டுகளாக மனு கொடுத்தும் நடவடிக்கை இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளார்.
தமிழ்நாடு மூவேந்தர் புலிப்படை அமைப்பு சார்பில் கொடுத்த மனுவில், வேடசந்துார், தொட்டணம்பட்டி பகுதியில் புதிதாக கட்டப்பட்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் மலக்கழிவு கலந்திருக்கிறது.
இதனை பயன்படுத்தும் மக்களுக்கு பல்வேறு நோய் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க மாவட்ட நிர்வாகம் உத்தரவிட வேண்டும் என கூறப்பட்டிருந்தது.
எரியோட்டை குருகலையம்பட்டி பகுதியை சேர்ந்த கிராம மக்கள் சார்பில் கொடுத்த மனுவில், எங்கள் பகுதியில் உள்ள கோயில் நிலத்தை சிலர் ஆக்கிரமித்துள்ளனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுத்து நிலத்தை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையென்றால் ஆதார் அட்டை உள்ளிட்ட ஆவணங்களை கலெக்டர் அலுவலகத்தில் திரும்ப ஒப்படைப்போம் என்று தெரிவித்திருந்தனர்.
பழநி நெய்க்காரப்பட்டி சுற்றுப்பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் சார்பில் கொடுத்த மனுவில், அரசியல் செல்வாக்கு உள்ளதெனவும அரசு வேலை வாங்கி தருவதாகவும் கூறி தனிநபர் லட்சக்கணக்கில் பணம் பெற்று மோசடி செய்துவிட்டார். அவர் மீது சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பலமுறை மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்திருந்தனர்.
பாதுகாப்பு ஏற்பாடு தீவிரம்
திண்டுக்கல் கலெக்டர் அலுவலக வளாகத்தில் பெண் ஒருவர் தீக்குளித்து உயிரிழந்த நிலையில் நேற்று நடந்த குறைதீர் நாள் கூட்டத்திற்கு போலீஸ் பாதுகாப்பு தீவிரமாக இருந்தது.
குறிப்பாக கலெக்டர் அலுவலகத்திற்குள் பல்வேறு பாதை வழிகள் மூலம் பொது மக்கள் வர முடியும். நேற்று அனைத்து பாதைகள் அடைக்கப்பட்டு முதன்மை பாதை வழியாக மட்டுமே மக்கள் உள்ளே அனுமதிக்கப்ட்டனர்.
பலத்த சோதனைக்கு பின்பே பொதுமக்கள் மனு கொடுக்கும் இடத்திற்கு அனுப்பப்பட்டனர்.