/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
பழநி நகராட்சி குப்பை கிடங்கில் தீ
/
பழநி நகராட்சி குப்பை கிடங்கில் தீ
ADDED : செப் 15, 2025 06:59 AM

பழநி : பழநி நகராட்சிக்கு சொந்தமான குப்பை கிடங்கில் நேற்று காலை கரும்புகையுடன் தீ பரவியது.
பழநி நகராட்சிக்கு சொந்தமான குப்பை கிடங்கு பெரியப்பா நகர் பகுதியில் உள்ளது. இங்கு நகராட்சியின் 33 வார்டு பகுதிகளில் டன் கணக்கில் சேகரிக்கப்படும் குப்பைகளை பிரித்து மேம்படுத்தி உரமாகவும் பிளாஸ்டிக் மாற்றப்படுகிறது. இதற்கான இயந்திரங்களுக்கு தனி மின் இணைப்பு பெறப்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று மின் கசிவு காரணமாக பிளாஸ்டிக் கட்டிகள் தீப்பற்றி கரும்புகையுடன் எரிந்தது. நிலைய அலுவலர் காளிதாஸ் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். அடிக்கடி குப்பை கிடங்கில் தீ பற்றி எரிவதால் ஏற்படும் புகையால் அப்பகுதி மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.
மின்வாரிய அதிகாரிகள் கூறுகையில் 'எங்கள் தரப்பில் டிரான்ஸ்பார்மர் பழுதடையவில்லை இயந்திரத்திற்கு வழங்கப்பட்டிருக்கும் பகுதியில் மின் கசிவு ஏற்பட்டிருக்கலாம்' என்றனர். நகராட்சியினர் விசாரிக்கின்றனர்.