/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
கால்பந்து லீக்: திண்டுக்கல் மரியன்னை பள்ளி அணி வெற்றி
/
கால்பந்து லீக்: திண்டுக்கல் மரியன்னை பள்ளி அணி வெற்றி
கால்பந்து லீக்: திண்டுக்கல் மரியன்னை பள்ளி அணி வெற்றி
கால்பந்து லீக்: திண்டுக்கல் மரியன்னை பள்ளி அணி வெற்றி
ADDED : ஜன 30, 2024 07:07 AM
திண்டுக்கல் : திண்டுக்கல் புனித மரியன்னை மேல்நிலைப்பள்ளி ஏ மைதானத்தில் நடந்த மாவட்ட 12வயது பிரிவு பள்ளி மாணவர்களுக்கான ஓட்டல் ஸ்வாகத் கிராண்ட் கோப்பைக்கான கால்பந்து போட்டியில் திண்டுக்கல் புனித மரியன்னை மேல்நிலைப்பள்ளி அணி வெற்றி பெற்றது.
திண்டுக்கல் பிரசித்தி வித்யோதயா உயர்நிலைப்பள்ளி அணி, திண்டுக்கல் எஸ்.பி.சி.அகாடமி ஆப் எக்சலன்ஸ் பள்ளி அணியை 9:0 என்ற கோல்கணக்கில் வென்றது. பிரவன் 5, கோகுல் 3, ஆல்வின் 1 கோல் எடுத்தனர்.
திண்டுக்கல் புனித மரியன்னை மேல்நிலைப்பள்ளி அணி, திண்டுக்கல் எஸ்.எம்.பி.எம்.பள்ளி அணியை 13:0 என்றகோல்கணக்கில் வென்றது. ஹரி 5, திலீப், தீனா தலா 3, திஜா, இமானுவேல் தலா ஒரு கோல்கள் எடுத்தனர்.
திண்டுக்கல் பார்வதீஸ் அனுகிரஹா இன்டர்நேஷனல் பள்ளி அணி, திண்டுக்கல் பண்ணை பப்ளிக் பள்ளி அணியை11:0 என்ற கோல்கணக்கில் வென்றது. கார்த்திக், கெவின்பாண்டி, பிளாவின் தலா 2, டுடே, பிர்த்துவி, தசீன்அப்துல், சஞ்சீவன், விஸ்வஜீத் தலா ஒரு கோல் அடித்தனர்.
புனித மரியன்னை பள்ளியின் பி மைதானத்தில் நடந்த போட்டியில், திண்டுக்கல் எஸ்.எஸ்.எம்.அகாடமி பள்ளி அணி, திண்டுக்கல் ஓம் சாந்தி சி.பி.எஸ்.சி. பள்ளி அணியை 4:1 என்ற கோல்கணக்கில் வென்றது.
எஸ்.எஸ்.எம்.அகாடமி பள்ளி அணியின் முகமது ஆஷிக் 4 கோல்கள் அடித்தார். ஓம் சாந்தி சி.பி.எஸ்.சி. பள்ளி அணியின் சகாய அகிலேஷ் ஒரு கோல் அடித்தார்.
திண்டுக்கல் எம்.எஸ்.பி.சோலைநாடார் நினைவு மேல்நிலைப்பள்ளி அணி வத்தலக்குண்டு அன்னை வேளாங்கண்ணி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி அணியை 3:2 என்ற கோல்கணக்கில் வென்றது.
எம்.எஸ்.பி.சோலைநாடார் நினைவு மேல்நிலைப்பள்ளி அணியின் மணி, வசந்த், ஹரீஸ் தலா ஒரு கோல் அடித்தனர்.
அன்னை வேளாங்கண்ணி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி அணியின் யோகேஷ், ஜிஜிந்த் தலா ஒரு கோல் அடித்தனர்.
திண்டுக்கல் அட்யுதா பப்ளிக் பள்ளி அணி சிலுக்குவார்பட்டி ஆர்.சி.மேல்நிலைப்பள்ளி அணியை 2:1 என்ற கோல்கணக்கில் வென்றது.
அட்யுதா பப்ளிக் பள்ளி அணியின் ஜாஸ்வா 2 கோல் அடித்தார். ஆர்.சி.மேல்நிலைப்பள்ளி அணியின் அசோக்குமார் ஒரு கோல் அடித்தார்.

