/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
கால்பந்து லீக்; பார்வதீஸ் பள்ளி வெற்றி
/
கால்பந்து லீக்; பார்வதீஸ் பள்ளி வெற்றி
ADDED : பிப் 24, 2024 03:56 AM
திண்டுக்கல் : திண்டுக்கல் புனித மரியன்னை மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் நடந்த மாவட்ட அளவிலான 12 வயது மாணவர்களுக்கான ஓட்டல் ஸ்வாகத் கிராண்ட் கோப்பைக்கான கால்பந்து போட்டியில் பார்வதீஸ் இன்டர்நேஷனல் பள்ளி அணி வென்றது.
இதன் போட்டியில் திண்டுக்கல் செயின்மேரீஸ் மேல்நிலைப்பள்ளி அணி திண்டுக்கல் எஸ்.எஸ்.எம்.
அகாடமி அணியை 6:3 என்ற கோல்கணக்கில் வென்றது.
செயின்மேரீஸ் மேல்நிலைப்பள்ளி அணியின் ஹரி 3, தியாகிஷீர் 2, தீனா ஒரு கோல் அடித்தனர். எஸ்.எஸ்.எம்.அகாடமி அணியின் நரேன் ஸ்ரீசாந்த், ஜிஷ்ணு, முகமது ஆசிக் தலா ஒரு கோல் அடித்தனர்.
திண்டுக்கல் பார்வதீஸ் இன்டர்நேஷனல் பள்ளி அணி திண்டுக்கல் எம்.எஸ்.பி.சோலை நாடார் நினைவு மேல்நிலைப்பள்ளி அணியை 3:1 என்ற கோல்கணக்கில் வென்றது.
பார்வதீஸ் இன்டர்நேஷனல் பள்ளி அணியின் பிரதிவ், கார்த்திக், விஸ்வஜீத் தலா ஒரு கோல் அடித்தனர். எம்.எஸ்.பி.சோலை நாடார் நினைவு மேல்நிலைப்பள்ளி அணியின் வாசு ஒரு கோல் அடித்தார்.