/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
கால்பந்து போட்டி; அனுகிரகா பள்ளி வெற்றி
/
கால்பந்து போட்டி; அனுகிரகா பள்ளி வெற்றி
ADDED : ஜன 10, 2024 06:48 AM

திண்டுக்கல் : ஏ.பி.சி. அகாடமி,சீட்ஸ் அகாடமி,திண்டுக்கல் மாவட்ட கால்பந்து கழகம் இணைந்து நடத்திய மாவட்ட அளவிலான 12 வயதிற்குட்பட்ட பள்ளி மாணவர்களுக்கான எழுவர் கால்பந்து போட்டியில் அனுகிரகா பள்ளி அணி வெற்றி பெற்றது.
ஏ.பி.சி. அகாடமி,சீட்ஸ் அகாடமி,திண்டுக்கல் மாவட்ட கால்பந்து கழகம் இணைந்து நடத்திய 12 வயதிற்கு உட்பட்ட பள்ளி மாணவர்களுக்கான எழுவர் கால்பந்து போட்டிகள் தொடர், நாக்அவுட் முறையில் திண்டுக்கல் ஏ.பி.சி அகாடமி மைதானத்தில் நடந்தது.
ஐ.எஸ்.எல். சென்னையின் எப்.சி. வீரர் அலெக்சாண்டர் ரோமாரியோ துவக்கி வைத்தார்.
தலா 3 பள்ளிகள் வீதம் 4 குழுக்களாக பிரிக்கப்பட்டு தொடர் போட்டிகள் நடத்தப்பட்டது. ஒவ்வொரு குழுவிலும் முதல் இடம் பெற்று அனுகிரகா, பிரசித்தி, வாசவி, ஓம்சாந்தி நள்ளிகள் அரை இறுதிப்போட்டிக்கு தகுதிபெற்றது.
அரையிறுதிப் போட்டியில் அனுகிரகா பள்ளி அணி, ஓம்சாந்தி பள்ளி அணியை 7:0 என்ற கோல் கணக்கில் வென்றது.
அனுகிரகா பள்ளி அணி வீரர் ரெகுசின்சி 2, முகமதுரில்வான் 2, டுடே, கெவின்சி ரேவந்த் கோல் அடித்தனர். வாசவி பள்ளி அணி பிரசிக்தி பள்ளி அணியை 2:1 என்ற கோல் கணக்கில் வென்றது. வாசவி பள்ளி அணி வீரர் பிரனேஷ், வினித்ரன், பிரசீகதி பள்ளி அணி வீரர் ரோகித்அஷ்வா கோல் அடித்தனர்.
இறுதிப்போட்டியினை அனுகிரகா பள்ளி அணி, வாசவி பள்ளி அணியை 1:0 என்ற கோல் கணக்கில் வென்றது. அனுகிரகா பள்ளி வீரர் முகமதுரில்வான் கோல் அடித்தார். மாவட்ட கால்பந்து கழக செயலாளர் சண்முகம் வெற்றி பெற்ற அனுகிரகா பள்ளி அணிக்கு கோப்பை, பதக்கம்,சான்றிதழ்களை வழங்கினார்.
ஏ.பி.சி அகாடமி பள்ளி செயலாளர் செந்தில்குமார், தாளாளர் ஆர்த்தி செந்தில்குமார். சீட்ஸ் அகாடமி செல்வபாண்டி பங்கேற்றனர்.

